நாகையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்: நாகை மாவட்டத்தில் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாகப்பட்டினமும் ஒன்று. இங்கு மாவட்டம் கிட்டத்தட்ட புயலில் சிக்கி சீர்குலைந்துள்ளது. தொடர்ந்து மறு சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Schools to be shot tomorrow in Nagai

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மக்கள் இன்னும் தங்க வைக்கப்பட்டிருப்பதாலும், சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாலும் நாளை நாகை வருவாய்க் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

புயல் தாக்கிய நாளிலிருந்து தொடர்ந்து இங்கு பள்ளிகள் இயங்காமல் இருந்து வருகின்றன. அதேசமயம், கல்லூரிகள் இயங்க ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார்குடியில் விடுமுறை:

இதேபோல மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல கோட்டூர், முத்துப்பேட்டை திருத்துறைபூண்டி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+