நான் பேசுவதே 3 நிமிஷம்தான்.. ஓபனாக ஒப்புக்கொண்ட விஜய்.. அதிர்ச்சி அடைந்த தவெக தொண்டர்கள்!
நாகை: தவெக தலைவர் விஜய் தாம் ஒவ்வொரு கூட்டத்திலும் 3 நிமிடங்கள் மட்டுமே பேசுகிறேன் என்பதை ஒப்புக் கொண்டிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே விஜய் ஒவ்வொரு மேடைகளிலும் குறைவான அளவிலேயே பேசுவதாக விமர்சிக்கப்பட்டு வந்து நிலையில், அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பின் விஜய் பங்கேற்ற மாநாடு, பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றில் விஜய்யின் பேச்சு விமர்சனத்தை பெற்றது. ஏனென்றால் 3 லட்சம் பேர் கூடிய கூட்டத்திலும் கூட விஜய்யின் பேச்சு 3 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை மனதில் வைத்து விஜய்யின் பேச்சு கட்டமைக்கப்படுவதாக விமர்சித்து வந்தனர். விஜய்யின் இந்த பேச்சிற்கு பின் அவருக்கு போதிய புரிதலோ, பிரச்சனையின் தீவிரமோ இல்லாததே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் நாகையில் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது விஜய் பேசுகையில், நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை மட்டும் ஏன் என்று கேட்கிறார்கள்.. வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் மட்டும் பிரச்சார பயணத் திட்டத்தை வகுத்தோம்.
மேலும் அரசியலில் இருந்து சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம். அதேபோல் மக்களை சந்திப்பதற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். அதற்கான காரணங்கள் எல்லாம் சொத்தையாக உள்ளது. 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் தான் பேச வேண்டும் என்கிறார்கள்.
ஆனால் நான் பேசுவதே 3 நிமிடங்கள் தான்.. அதிலும் இதை பேசக் கூடாது, அதை பேசக் கூடாது என்றால், நான் எதைத்தான் பேசுவது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலமாக விஜய் தாம் 3 நிமிடங்கள் மட்டுமே பேசுகிறேன் என்பதை அறிந்தே பேசி வருவதாக புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு பின் தவெக தொண்டர்களை கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்!












Click it and Unblock the Notifications