"மோசமான காம கொடூரன்.. விட்டுடாதீங்க" கதறும் பெண்கள்.. காசிக்கு 3 நாள் போலீஸ் காவல்.. கோர்ட் அனுமதி

நாகர்கோயில் காசியை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி காசி விவகாரம் ரொம்ப பெரிசாகும் என்றே தெரிகிறது.. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நிலையில், "காசியை விட்டுடாதீங்க.. தனி ஆள் இல்லை, அவன் குரூப் போட்டோவை பாருங்க.. முக்கியமான ஆட்கள் இருப்பது தெரியும்" என்று மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இதனிடையே, காசி இன்று நாகர்கோயில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது!!

Recommended Video

    பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை... அதிர வைத்த நாகர்கோவில் காசி

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. இன்னொரு பெயர் சுஜி.. வயது 26.. படிக்கிற காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி, ஏமாற்றி தன் வலையில் விழ வைத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    4 மாடிக்கு வீடு கட்டி உள்ளார்.. நிறைய சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார்.. முதன்முதலில் காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர் புகார் தரவும்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜிம் பாடி போட்டோக்களை காட்டி காட்டியே ஏகப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விழ வைத்துள்ளார்.. பெண்ணியம் கருத்துக்களை சொல்லி டிக்டாக் வீடியோவும் பதிவிட, அதன்மூலமும் பல பெண்கள் விழுந்துள்ளனர்.

     இளம் பெண்கள்

    இளம் பெண்கள்

    பெண் டாக்டர், பெண் என்ஜினியர், வேறு ஒரு இளம்பெண்கள் என அடுத்தடுத்த புகார்கள் பதிவாகி வருகின்றன.. அது மட்டுமல்ல, பலரும் ஆதாரங்களுடன் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ஒரு பெண், "காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.. இப்போது நான் நான் இந்தியாவிலேயே இல்லை.. அதனால் இந்த தகவலை குமரி மாவட்ட போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். காசி தனி ஆள் இல்லை.. பெரிய கும்பலாக சேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள்... அவர்களின் குரூப் போட்டோவில் முக்கிய கூட்டாளிகளின் படங்களும் இருக்கின்றன.. அவங்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அதனால் அவங்களையும் விட்டுவிடக்கூடாது" என்று கண்ணீர் வடித்துள்ளார்.

    லேப்டாப்கள்

    லேப்டாப்கள்

    இப்போதைக்கு கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அதில் இருந்தன.. நண்பர்கள் ஒரு பக்கம் விசாரணை வளையத்தில் உள்ளனர்.. காசிக்கு அரசியல் புள்ளிகள், விஐபிக்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவதால், அதை பற்றின விசாரணையும் நடந்து வருகிறது. இவரை பற்றி பாடகி சின்மயி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.. "காசி ஒரு காமக்கொடூரன்... ஸ்கூல் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்... அவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்" என்றும் தெரிவித்திருந்தார்.

     குண்டர் சட்டம்

    குண்டர் சட்டம்

    காசியை இப்போதைக்கு கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்துள்ளனர்.. குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.. 200 பெண்களுக்கும் மேலாக இவர் சீரழித்திருப்பார் என்பதற்கான ஆதாரங்கள் அவரது ஹார்ட் டிஸ்க், லேப்டாக்களில் கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.. முக்கிய தடயங்கள் சிலவையும் கிடைத்துள்ளன.. பண மோசடி, நிலமோசடி, கந்துவட்டி, என ஏகப்பட்ட கேஸ்களும் காசி மீது பதிவாகி உள்ளன. அதனால் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

     விசாரணை

    விசாரணை

    நேற்றே விசாரணைக்காக பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழைத்து வரப்படவில்லை... அதனால் இன்று எப்படியும் காசியை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புடன் நாகர்கோயில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.. அப்போது காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.. காசியிடம் 10 நாள் விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டப்பட்ட நிலையில், தற்போது 3 நாள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த 3 நாளில் எப்படியும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கும் என்றே தெரிகிறது.

     குற்றங்கள்

    குற்றங்கள்

    காசியின் தொடர்பில் இருந்த அந்த விஐபிக்கள் யார், ஏமாற்றிய நடிகரின் மகள் யார், சீரழிந்த சப்இன்ஸ்பெக்டரின் மகள் யார், போட்டோக்களில் உள்ள அந்த பிரபலங்கள் யார், என்றெல்லாம் இனிமேல்தான் விசாரணையில் தெரியவரும். எப்படி இருந்தாலும் அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால், பொள்ளாச்சி சம்பவத்தை போல இல்லாமல் காசிக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+