"செஞ்சி சிறுமி ஹேமலதாவை நாமக்கல்லில் பார்த்தேன்.." பரபரப்பை கிளப்பிய பெண்.. உடனே விரைந்த சிபிசிஐடி!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவை தேடும் பணிகள் தீவிரமாக டந்து வருகிறது. சிபிசிஐடி போலீசார் இது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே மாயமான சிறுமியை நாமக்கல்லில் பார்த்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஹேமலதா, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அதிகாலையில் இந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து உள்ளூர் போலீசார் சுமார் 10 நாட்களாக தேடுதல் பணியில் ஈடுபட்டும் சிறுமி குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

Gingee girl

சிபிசிஐடி விசாரணை

இதனை தொடர்ந்து சிறுமி படித்த அரசு பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், தப்பியோடிய சாமியார் ஆகியோர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சுடுகாடுகள், காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. சிறுமி மாயமான நாளன்று நள்ளிரவில் அந்த பகுதியை கடந்து சென்ற 14 நேஷனல் பெர்மிட் லாரிகளின் ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஹேமலதா

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிறுமியை தேடி வரும் சிபிசிஐடி போலீசார், ஹேமலதாவின் போட்டோக்களை அனைத்து மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகே உள்ள கோவிலில் சிறுமியை போன்ற தோற்றமுடைய குழந்தையை பார்த்ததாக பெண் ஒருவர் அளித்த தகவல் பேசுபொருளாகியுள்ளது.

திடீரென வந்த தகவல்

நாமக்கல் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 35 வயதான பவானி, கோனாணூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வயதான தம்பதியினருடன் சிறுமி ஒருவர் இருந்ததாகவும், அந்த குழந்தை காணாமல் போன ஹேமலதாவை போலவே தோற்றமளித்ததாகவும் பவானி தெரிவித்துள்ளார். இதையடுத்து தாமதிக்காமல் அவசர கட்டுப்பாட்டு எண் 100ஐ தொடர்புகொண்டு இதுகுறித்து தகவல் அளித்துள்ளார்.

பவானி அளித்த தகவலின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் நாமக்கல்லுக்கு விரைந்து சென்று பவானியிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் பவானி பார்த்தது காணாமல் போன ஹேமலதா தானா, அவர் அளித்த தகவலின் நம்பகத்தன்மை என்ன என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிசிடிவி

இதற்கு முன்பும் கரூர் பகுதியில் ஹேமலதாவை சிலர் பார்த்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், அந்தக் காட்சிகளில் காணப்பட்டது ஹேமலதா இல்லை என்பது உறுதியானது. இந்த சூழலில் தான் நாமக்கல் மாவட்டத்திலும் ஹேமலதாவை பார்த்தாக இந்த பெண் சொல்லியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+