"உறவு"க்கு தடையாக மாமியார்.. கொந்தளித்த மருமகன்.. உச்சக்கட்ட டென்ஷனில்.. திகைத்த நாமக்கல்
: மாமியாரை கொன்ற மருமகனை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்
நாமக்கல்: கணவன் மனைவியை நீண்ட நாட்களாகவே பிரித்து வைத்துவந்துள்ளார் மாமியார்.. இதையடுத்து நடந்த சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது.. திருச்செங்கோடு அருகே உள்ளது கருவேப்பம்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் கோகிலா.. 40 வயதாகிறது.
கணவனை இழந்தவர்.. கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு ஆர்த்தி என்ற மகளும் வசந்த குமார் என்ற மகனும் இருக்கிறார்கள்.

ஆர்த்தியுடன் காதல்
இதில் ஆர்த்தியை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, கார்த்தி என்பவர் காதலித்தார்.. இவர் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருபவர்.. முறைப்படி, கோகிலாவிடம் சென்று பெண் கேட்டுள்ளார்.. பெண்ணை தேடி வந்து பெண் கேட்டதாலும், ஆதரவற்ற நிலையில் உள்ளதாலும் கோகிலாவும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.. பிறகு, இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணமும் சிறப்பாக நடந்தது.. தம்பதி இருவரும் மாங்குட்டை பாளையத்தில் வசித்து வந்துள்ளனர்.

ஜன்னி
ஆனால், கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் கார்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. ஜன்னி வந்துவிட்டதாம்.. இதை பார்த்து பயந்து போன ஆர்த்தி, அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மனைவியையும் பிரிந்து தனியாகவே அவதிப்பட்டு வந்தார் கார்த்தி.. இப்படியே ஒரு மாதமாக உடல்நலம் குன்றி கஷ்டப்பட்டுள்ளார்.. பிறகு, மாமியார் வீட்டிற்கு பின்பக்கத்திலேயே குடிபோகலாம், அங்கு சென்று மனைவியுடன் சந்தோஷமாக வாழலாம் என்று நினைத்து, அதன்படியே, ஒரு வாடகை வீட்டை தேடி பிடித்து வந்து குடியேறினார் கார்த்தி.

உறவுக்கு மறுப்பு
மனைவியையும் புது வீட்டிற்கு குடித்தனம் செய்ய அழைத்தார்.. ஆனால், ஆர்த்தி வர மறுத்துவிட்டார்.. முக்கியமாக, மகளை அனுப்ப கோகிலா தயாராக இல்லை.. கணவருடன் ஒன்று சேரவும் தடையாக இருந்து வந்துள்ளார்.. கணவன் - மனைவி சேர்ந்து இருப்பதே கோகிலாவுக்கு பிடிக்கவில்லை என்று தாமதமாகத்தான் கார்த்திக்கு தெரியவந்துள்ளது. . இதனால், நேரடியாகவே மாமியாரிடம் இதை பற்றி கேட்டு தகராறு செய்தார் கார்த்தி. அப்படித்தான் நேற்றும் மாமியாரிடம், தன் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கெஞ்சியுள்ளார்.

அம்மிக்குழவி
அதற்கு கோகிலா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது.. இதனால், கோபம் உச்சத்துக்கு ஏறிய நிலையில், கார்த்திக் கோகிலாவின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. தகவலறிந்து வந்த திருச்செங்கோடு போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்... கணவன் - மனைவி உறவுக்கு தடையாக இருந்த மாமியார் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் கருவெப்பம்பட்டி பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications