குழந்தையை பிரசவித்த சில மணி நேரங்களில்.. வேலையை விட்டு தூக்கிய கூகுள் ஊழியர்.. தொடரும் சோக கதைகள்
இதேபோல சமீபத்தில் புற்றோய் பாதித்து உயிரிழந்த தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ஊழியர் ஒருவரை கூகுள் பணிநீக்கம் செய்திருந்தது.
நியூயார்க்: சமீபத்தில் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கின. மைக்ரோசாஃப்ட், அமேசான், ஐபிஎம் தொடங்கி கூகுள் வரை இந்த பணிநீக்கங்கள் நீடித்தன. கூகுளில் மட்டும் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கேட் ஹோவெல்ஸ் எனும் பெண்மணி ஒருவர் தான் குழந்தை பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து லிங்க்ட் இன்-ல் அவர் கூறியுள்ளதாவது, "நான் கடந்த 9.5 ஆண்டுகளாக கூகுளில் பணியாற்றி வருகிறேன். ஏறத்தாழ அனைத்து துறைகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். வேலை நன்றாக சென்றுக்கொண்டிருந்தது. இதற்கிடையில் நான் இரண்டாவது முறை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று தேதி ஜனவரி 19. பயங்கரமான பிரசவ வலிக்கு பின்னர் நான் எனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தேன்.

உடல்நிலை
அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். ஆனால் அதனை கொண்டாடும் நிலையில் என் உடல்நிலை இல்லை. பிரசவ வலி, ரத்த இழப்பு, உடல் சோர்வு, மயக்கத்தால் தெளிவற்ற நிலை ஆகியவற்றுடன் நான் போராடிக்கொண்டிருந்தேன். குழந்தை எனதருகிலேயே இருந்தது. அடுத்த நாள் காலையில் குழந்தையை நான் கையில் ஏந்தியவாறு படுத்திருந்தேன். அப்போதுதான் என்னுடைய பணிநீக்க மெயிலை நான் பார்க்க நேர்ந்தது. முதலில் எனக்கு இது அதிர்ச்சியை கொடுக்கவில்லை. அதிர்ச்சி மட்டுமல்ல வேறு எந்த உணர்வையும் எனக்கு இது கொடுக்கவில்லை. பிரசவத்திற்கு பின்னர் 48 மணி நேரம் கழித்துதான் என்னால் இந்த சம்பவத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இந்த சம்பவத்தையடுத்து நாங்கள் நியூயார்க்கிலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

AI தொழில்நுட்பம்
இந்த இழப்பு மூலம் நாங்கள் அதற்கு ஏற்ப பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். தற்போது எங்களுக்கு முன்னாள் ஒரு மிகப்பெரிய சவால் இருக்கிறது. இந்த சவாலை நாங்கள் AI தொழில்நுட்பத்துடன் எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே நாங்கள் சாவால்களை நல்ல முறையில் எதிர்கொண்டு மேலும் முன்னோக்கி செல்வோம். இந்த பணிநீக்கத்திற்கு நாங்கள் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்த கடிதத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கேட் ஹோவெல்ஸ் போல ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் கேட் ஹோவெல்ஸ் போலவே டாமி யோர்க் எனும் ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கடிதம்
முன்னதாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், "கடினமாக உழைத்த மற்றும் நம்ப முடியாத திறமை வாய்ந்த சிலரிடம் விடைபெறுவது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மாற்றங்கள் கூகுள் செய்பவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற உண்மை என்னை மிகவும் பாதிக்கிறது. இந்த முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்றுக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி என்பது வியப்பளிக்கக்கூடியதாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கான உந்து சக்தியாக நீங்கள் இருந்தீர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் யதார்த்தத்தில் பயணிக்க வேண்டும்.

இறுதி சடங்கு
தனது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில் இவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் கடந்த 2021ம் ஆண்டு கூகுளில் சேர்ந்தேன். பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே எனது தாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவருக்கு நான்காம் கட்ட கணைய புற்று நோய் பாதிப்பு இருந்தது. நாளுக்கு நாள் தாயின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இறுதியாக ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் சிகிச்ச பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது இறுதி சடங்கை நடத்த நான்கு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தேன்.

வேலை
பின்னர் 5வது நாள் பணிக்கு திரும்பியபோது எனது நிறுவனம் எனக்கு ஒரு செய்தியை வைத்திருந்தது. எனக்கான பணி நீக்கம் என்பதுதான் அந்த செய்தி. இது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், நான் இது போன்று ஓராயிரம் நிறுவனங்களில் பணி செய்ய முடியும். ஆனால், தாய் என்பவள் ஒருவர்தானே? எனவே அவருடன் பொழுதுகளை கழிப்பதும், அவளது இறுதி சடங்கில் பங்கேற்பதும்தான் எனக்கு மன நிம்மதியை வழங்கும். இதற்கடுத்து ஒருநாள் நான் இந்த தடையை தாண்டிவிடுவேன்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications