ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ
நியூயார்க்: சைக்கிளில் செல்லும் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு தாவி செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம்மூரில் பலர் இருசக்கர வாகனங்களில், சைக்களில் சாககங்களில் ஈடுபடும் வீடியோக்களை பார்த்திருப்போம். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பலர் வீலிங் செய்து ஒரு சக்கரத்தை மட்டும் தூக்கி கொண்டு ஓட்டுவது, பின் சக்கர்த்தை மட்டும் தூக்கி ரவுண்ட் அடிப்பது போன்ற சாகசங்களை பார்த்திருப்போம்.

ஏன் விஸ்வாசம் படத்தில் அஜித் ஒரு சண்டைக்காட்சியில் நிஜமாகவே பைக்கின் பின் சக்கரத்தை தூக்கி அசத்துவார். இப்படி பல சாகசங்கள் வந்துள்ள நிலையில், மேற்கத்திய நாடு ஒன்றில் சைக்கிளில் ஒருவர் செய்த சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சைக்கிளில் செல்லும் ஒருவர் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு தாவுகிறார் கால் தரையில் கூட படவில்லை. முழுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியும். அந்த ஆற்றின் கரை என்பது குறைந்தது 8 அடிக்கு மேல் இருக்கும் என்பது தான் அதன் கூடுதல் விஷயம். மெய்சிலிர்க்க வைக்கும் அந்த சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— People Are Awesome (@PeopleAreOsm) July 1, 2020
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யாரும் இது போன்ற சாகசங்களை செய்ய வேண்டாம். ஏனெனில் இவை முறையாக பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்பட்ட சாகச வீடியோவாக இருக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications