நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு கையில் சிகரெட்.. மறுகையில் சானிடைசர்.. டிரைவரின் அஜாக்கிரதையால் பற்றி எரிந்த கார்.. உஷார் மக்களே

அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவர் புகைப்பிடித்துக்கொண்டே கை சுத்திகரிப்பானை பயன்படுத்தியதால் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து முகக்கவசமும், கை சுத்திகரிப்பானும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டன. மருந்தகங்களில் மட்டுமே விற்கப்பட்டு வந்த கை சுத்திகரிப்பான்கள் தற்போது மளிகை கடைகளிலும் பல வடிவங்களில் கிடைக்க தொடங்கிவிட்டன.

அதனால் தான் மாதந்திர பட்ஜெட்டில் கை சுத்திகரிப்பான்களும் தற்போது சேர்ந்துவிட்டன. கடந்த ஓராண்டாக தொடர்ந்து கை சுத்திகரிப்பானை பயன்படுத்தி வருபவர்களுக்கு, அவ்வப்போது அதை பயன்படுத்துவது அனிச்சையான செயலாக மாறிவிட்டது.

இந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்இந்தியாவில் முதல் முறையாக பாக்கெட் ரைசர் சானிடைசர்.. 99% பாக்டீரியாவை கொல்லும்.. கோவை இளைஞர் அசத்தல்

சானிடைசர்களின் ஆபத்து

சானிடைசர்களின் ஆபத்து

ஆனால் கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதனை ஆரம்பத்தில் இருந்தே மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். காரணம் அதன் மூலப்பொருளில் ஸ்பிரிட் இருப்பதால் எளிதில் தீப்பற்றிவிடும். எனவே கையில் சானிடைசர் பயன்படுத்தும் போது தீ சம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து சுற்று தள்ளியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கார் விபத்து

கார் விபத்து

ஆனால் இதை கவனத்தில் கொள்ளாததால் பல தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் மக்களிடையே இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதை அமெரிக்காவில் நடந்த தீவிபத்து நிரூபித்துள்ளது. சம்பவத்தன்று மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

பதற வைத்த காரணம்

பதற வைத்த காரணம்

இதைப்பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் காரின் பெரும்பகுதி தீயில் எரிந்துவிட்டது. அதிர்ஷ்டசமாக காரின் ஓட்டுனர் சிறு தீக்காயங்களுடன் உயிர் தப்பிட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விபத்துக்கான காரணம் தெரிய வந்தது. அதுதான் அனைவரையும் பதற வைத்துள்ளது.

 பற்றிக் கொண்ட தீ

பற்றிக் கொண்ட தீ

தீ விபத்துக்குள்ளான காரின் ஓட்டுனர், அந்த காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தபடியே சிகரெட் ஒன்றை பற்றவைத்திருக்கிறார். இரண்டு இழுப்பு இழுத்துவிட்ட பிறகு, டேஷ்போர்டில் இருந்த சானிடைசரை எடுத்து கையில் தெளித்திருக்கிறார். அப்போது சிகரெட் நெருப்பில் தவறுதலாக சானிடைசர் பட்டு உடனடியாக தீப்பற்றிவிட்டது.

அசம்பாவிதம் தவிர்ப்பு

அசம்பாவிதம் தவிர்ப்பு

ஓட்டுனரின் கை மற்றும் தொடைப்பகுதிகளில் முதலில் தீ பற்றி இருக்கிறது. பின்னர் தீ கார் முழுவதும் மளமளவென பரவியுள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அந்த ஓட்டுனர் டக்கென காரில் இருந்து கீழிறங்கி ஓடிவிட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கார் முழுவதும் தீப்பிடித்து கருகிவிட்டது.

விழிப்புணர்வு தேவை

விழிப்புணர்வு தேவை

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தீயணைப்பு துறையினர் தங்களுடைய சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். சிகரெட் பற்ற வைத்த கையோடு சானிடைசர் பயன்படுத்தியதால் நேர்ந்த இந்த தீ விபத்து பலரையும் பதறவைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகாவது மக்கள் மேலும் உஷாராக நடந்து கொண்டால் நல்லது என தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.

English summary
In Maryland, US a car which was running on the road caught fire suddenly after the driver used hand sanitizer while smoking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X