கிருமி நாசினியை குடிக்க வேண்டாம்.. நான் கிண்டலாக சொன்னேன்.. "டேமேஜ் கண்ட்ரோல்" செய்யும் டிரம்ப்!
நியூயார்க்: கிருமி நாசினியை உடலில் செலுத்தி கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என்று தான் கூறியது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். தான் நையாண்டியாக அப்படி குறிப்பிட்டதாக டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கொரோனாவிற்கு தீர்வு சொல்கிறேன் என்று அளித்த பேட்டி பெரிய சர்ச்சையானது. மே மாதம் வந்தால் கொரோனாவின் தாக்கம் குறையும். வெயில் மூலம் வரும் புற ஊதா கதிர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும்.
சூரிய ஒளிகள் கொரோனாவை கொல்கிறது. காற்று மற்றும் நிலப்பரப்பில் இருக்கும் கொரோனவை சூரிய ஒளி கொல்கிறது என்று நேற்று அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் பிராயன் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி பெரிய சர்ச்சையானது.

டிரம்ப் என்ன சொன்னார்
இதையடுத்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், சூரிய ஒளி மூலம் கொரோனா பலியாகும் என்பது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது.அதனால் நம்முடைய உடலில் அதிக அளவு ஒளியை செலுத்தினால் ஒருவேளை கொரோனா குணமடைய வாய்ப்பு உள்ளது. நமது உடலுக்குள் புற ஊதா கதிர்கள் கொண்ட ஒளிகள் அல்லது அதிக சக்தி வாய்ந்த ஒளிகளை செலுத்தி கொரோனாவை கொல்ல வேண்டும்.

கிருமி நாசினியை செலுத்த வேண்டும்
நமது உடலுக்கு உள்ளேயோ அல்லது உடலின் மேற்பரப்பிலோ இப்படி நாம் அதிக சக்தி வாய்ந்த ஒளியை அனுப்ப வேண்டும். அதேபோல் நமது உடலுக்குள் கிருமி நாசினியை செலுத்த வேண்டும். இப்படி உடலுக்குள் கிருமி நாசினியை செலுத்தினால் அது கொரோனாவை கொல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் இதை இன்னும் டெஸ்ட் செய்யவில்லை. இதை சோதனை செய்து பார்க்க வேண்டும். இது கொரோனாவை ஒரே நொடியில் கொன்றுவிடுகிறது என்று கேள்விப்பட்டேன், என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

கடும் விமர்சனம்
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் இது தொடர்பாக விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவது எந்த வகையிலும் சரியானது இல்லை என்று கூறியுள்ளனர்.இந்த நிலையில் இது தொடர்பாக அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் அந்த பதிலை சீரியஸாக சொல்லவில்லை. அது நான் நையாண்டியாக கேட்ட கேள்வி.

என்ன விளக்கம்
அறையில் இருந்த செய்தியாளர் ஒருவரிடம் இப்படி உடலில் கிருமிநாசினியை செலுத்த முடியுமா என்று நையாண்டியாக கேட்டேன். அங்கு அப்போது சூழ்நிலை நையாண்டியாக இருந்ததால், அப்படி பதில் அளித்து இருந்தேன். ஆனால் கிருமி நாசினி தடவினால் கைகளில் கொரோனா கிருமிகள் சாகிறது. கைகளுக்கு கிருமி நாசினிகள் நல்ல பலன் அளிக்கிறது. ஆனால் உடலுக்கு அதை உட்கொள்ள கூடாது. அது நான் நையாண்டியாக சொன்னது.

பொய்யான மீடியா மீது கோபம்
உங்களை போன்ற பொய்யான சில மீடியா நபர்களுக்காக நான் கேட்ட நையாண்டி கேள்வி அது. மக்கள் யாரும் இது போன்ற கிருமி நாசினிகளை கண்டிப்பாக உட்கொள்ள கூடாது. அதே சமயம் கிருமி நாசினிகள் எப்படி இந்த கொரோனா வைரஸை கொல்கிறது என்பதை விசாரிக்கும்படி கூறியுள்ளேன். அதேபோல் சூரிய ஒளி மூலம் கொரோனா வைரஸ் எப்படி சாகிறது என்பதையும் விசாரிக்கும் படி கூறி இருக்கிறேன், என்று டிரம்ப் கூறியுள்ளார்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications