நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா எவ்வளவு பணம் கொடுத்தது.. நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.. டிரம்ப் கேட்ட கேள்வி.. சிக்கலில் ஹு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் உலக சுகாதார மையம் மக்களை ஏமாற்றிவிட்டது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இயல்பு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம் | China's Wuhan City Back to Normal

    கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து உலக சுகாதார மையத்தை விமர்சனம் செய்து வருகிறார். நேற்று உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசினார்.

    இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சிஇந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி

    அதிபர் டிரம்ப் பேட்டி

    அதிபர் டிரம்ப் பேட்டி

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், உலக சுகாதார மையம் வரிசையாக தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. அது உலக நாடுகளை ஒரே மாதிரி பார்க்கவில்லை. சீனாவிற்கு அந்த அமைப்பு அதிக முக்கியத்துவம் தருகிறது. சீனா சொன்னதை அப்படியே உலக சுகாதார மையம் கேட்கிறது. அந்த அமைப்பிற்கு நாங்கள்தான் அதிகம் செலவு செய்வது.

    பல மில்லியன் டாலர்

    பல மில்லியன் டாலர்

    பல மில்லியன் டாலர்களை எல்லா வருடமும் உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் கொடுக்கிறோம். கடந்த வருடம் மட்டும் 452 மில்லயன் டாலர் பணம் கொடுத்தோம். சீனா எவ்வளவு கொடுத்தது தெரியுமா? சீனா வெறும் 42 மில்லியன் டாலர்தான் கொடுத்தது. 452 மில்லயன் டாலர் நாங்கள் கொடுத்தும் கூட எல்லாம் சீனாவின் திட்டபடியே நடக்கிறது. சீனாவின் பேச்சைத்தான் உலக சுகாதார மையம் கேட்கிறது.

    அமெரிக்காவிற்கு சரியானதாக தெரியவில்லை

    அமெரிக்காவிற்கு சரியானதாக தெரியவில்லை

    இது எங்களுக்கு சரியானதாக தெரியவில்லை. உலகிற்கும் இது சரியானது கிடையாது. ஜனவரி 14ம் தேதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது என்று கூறியது. சீனா வெளியிட்ட பொய்யான அறிக்கையை அப்படியே நம்பி உலக சுகாதாரம் மையம் இப்படி செய்தது. இது போல உலக சுகாதார மையம் நிறைய தவறுகளை செய்துள்ளது.

    விரைவில் முடிவு

    விரைவில் முடிவு

    உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றுதான் உலக சுகாதார மையம் உள்ளது. ஆனால் உலக சுகாதார மையத்தின் செயல்பாடுகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை. அதனால் அவர்களின் பழைய செயல்களை எல்லாம் சோதனை செய்ய போகிறோம். அதன்பின் உலக சுகாதார மையம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க போகிறோம், என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Coronavirus: We spent a lot, But WHO is too China-centric says Trump again in the press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X