இத்தனை நாளும் இது தெரியாம போச்சே.. கொரோனா தடுப்பூசியால் இவ்வளவு நன்மைகளா.. புது ஆய்வின் முடிவு
கொரோனா தடுப்பூசி பல வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது
நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பங்கள் இன்னும் ஆங்காங்கே உள்ள நிலையில், அதுகுறித்த புது ஆய்வு ஒன்று வெளியாகி உள்ளது.
தொற்றை ஒழிக்க வேறு வழி இல்லாததால், உலகம் முழுவதும் தடுப்பூசிகளை பெரிதும் நம்பி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.. இந்தியாவிலும் அதே நிலைமைதான்.
இன்றைய நிலைவரப்படி, நாடு முழுவதும் 99 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது..

தடுப்பூசிகள்
அந்த வகையில், 100 சதவீதம் இலக்கை விரைவில் இந்தியா எட்டிப்பிடிக்க உள்ளது.. இதுவரை 98.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் அறிக்கை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.... கடந்த ஜனவரியில் தடுப்பூசி விநியோகம் தொடங்கிய ஜனவரியில் தடுப்பூசி விநியோகம் தொடங்கிய காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன.

மத்திய சுகாதரத்துறை
ஆனால், தடுப்பூசியால் ஏற்படும் பாதகமான பக்க விளைவுகளைக் கண்டு அதிகம் பேர் தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.. இதற்கான பல்வேறு விளக்கங்களை மத்திய சுகாதார துறை அளித்திருந்தது... தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியது.. இதனிடையே வந்த 2வது அலை பரவல், ஏராளமான உயிர்களை காவு வாங்கிவிட்டதால், பொதுமக்களே தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இதுவரை அப்படி ஒரு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
Recommended Video

ஆய்வுகள்
மற்றொருபக்கம் புது புது தடுப்பூசிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டுதானிருக்கிறார்கள்.. அதுகுறித்த ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்ற ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.. கொரோனாவுக்கு ரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மெடிக்கல் காலேஜ் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.. அந்த முடிவுகளை "ஜர்னல் ஆப் கிளினிக்கல் இன்வெஸ்டிகேஷன்" என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

தடுப்பு
அதில், கோவிட்-19 தடுப்பூசிகள், அதுபோலவே உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.. கொரோனா வைரஸ்கள் என்றால், அது சார்பெகோ வைரஸ் அடங்கிய சார்ஸ் கோவ்-1, சார்ஸ், சார்ஸ் கோவ்-2 ஆகிய 3 வைரஸ்களை குறிக்கிறது.. கோவிட்-19 தடுப்பூசி இப்போது கோவிட் -19 தொற்றை உருவாக்குகிற சார்ஸ்கோவ்-2 வைரஸூடன், பிற வைரஸ்களையும் தடுக்கிறது.

ஜலதோஷம்
சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற எச்கோவ்-ஆக்43, எச்கேயு-1 வைரஸ்களில் இருந்தும் கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.. இதனிடையே, இந்த வைரஸ்களுக்கு எதிராக கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்ற ஆய்வும் தற்போது வருவதாக விஞ்ஞானி பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications