ஆபாச அழகியால் சிக்கிய மாஜி அதிபர் "டிரம்ப்".. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்! பரபரப்பு
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது செய்யப்பட உள்ளார். ஆபாச படங்களில் நடிக்கும் நாயகி ஒருவருக்கு காசு கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கைது செய்யப்படுகிறார்.
2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்ப் இந்த பணத்தை ஸ்டோமி டேனியல்ஸ் என்ற பெண்ணிற்கு கொடுத்து உள்ளார். அந்த பெண்ணுடன் இவருக்கு நெருக்கமாக இருந்த தொடர்பு காரணமாக இந்த பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக ஸ்டோமி டேனியல்ஸ் ஊடகங்களை தொடர்பு கொண்டு தனக்கும் டிரம்பிற்கும் இருக்கும் தொடர்பு பற்றி சொல்ல போவதாக பேட்டி அளித்துள்ளார். அதாவது 2006ல் இவர்கள் ஒன்றாக பாலியல் உறவு வைத்துக்கொண்டதை பற்றி சொல்லப்போவதாக கூறி உள்ளார்.

பாலியல் உறவு
2005ல் டிரம்ப் தனது தற்போதைய மனைவி மெலினா டிரம்பை திருமணம் செய்து இருந்தார். 2006லேயே டிரம்ப் கள்ள உறவு வைத்த நிலையில், 2016 அதிபர் தேர்தலுக்கு முன் இதை பற்றி சொல்ல போவதாக ஸ்டோமி டேனியல்ஸ் கூறி இருந்துள்ளார். இதையடுத்து அவரை சரி கட்ட வேண்டும் என்று, அவருக்கு 130000 டாலர் பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை நடந்த எதுவும் தவறு கிடையாது. மெலினா டிரம்ப் தனது கணவர் மீது புகார் கொடுக்காத வரை இது எதுவுமே தவறு கிடையாது. ஆனால் இங்கே டிரம்ப் செய்த தவறு என்பது.. அந்த 130000 டாலருக்கு அவர் கணக்கு காட்டியதுதான்.

கணக்கு
அந்த தொகையை தனது லாயருக்கான பீஸ் என்று இவர் கணக்கு காட்டி இருக்கிறார். இது நியூயார்க் சட்டப்படி குற்றம் ஆகும். இங்குதான் டிரம்ப் மாட்டிக்கொண்டு உள்ளார். அதோடு தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் வெளியே தெரிய கூடாது என்று காசு கொடுத்து இவர் வாக்காளர்களை ஏமாற்றி உள்ளார். இது இரண்டும்தான் இப்போது அவர் மீது வைக்கப்படும் கிரிமினல் குற்றச்சாட்டு. ஒரு குற்றத்தை மறைக்க கணக்கு வழக்குகளை தவறாக காட்டுவது என்பது ஒரு பெலோனி கிரைம். இதற்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

தண்டனை
இந்த வழக்கில் ஜூரி குழு தற்போது டிரம்ப் குற்றம் செய்வதராக நம்புவதாக குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை நடக்கும் வரை டிரம்ப் ஜெயிலில் இருக்க வேண்டும். அவருக்கு பெயில் கிடைக்காது. இந்த குற்றத்திற்கு பெயில் கிடையாது. ஆனால் டிரம்ப் முன்னாள் அதிபர் என்பதால் சில விதி விலக்கு கொடுக்கப்படும். டிரம்ப் கையில் விலங்கு போட்டு அவரை கைது செய்வார்கள். இதற்காக அவருடைய வக்கீலிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ப்ளோரிடாவில் இருந்து அவர் நியூயார்க் கொண்டு வரப்பட்டு பின்னர் கைது செய்யபபடடலம்.

யார்?
அமெரிக்காவின் மான்ஹட்டன் மாவட்ட அட்டர்னி ஆல்வின் பிராக் என்பவர்தான் இந்த விசாரணையை நடத்தி வந்தது. அவர்தான் இந்த விவகாரம் வெளியே வர முக்கிய காரணம் ஆவார். தற்போது இவர் டிரம்ப் வக்கீலை தொடர்பு கொண்டு அவரை சரண் அடைய செய்யும்படி கூறி உள்ளார். இதையடுத்து விரைவில் டிரம்ப் சரண் அடைவார். அதன்பின் கோர்ட்டில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் அவர் சிறை செல்வார். இது போன்ற ஒரு கிரிமினல் வழக்கில் அமெரிக்க அதிபர் அல்லது முன்னாள் அதிபர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications