கப்பலேறி போயாச்சு இந்தியாவின் மானம்.. சூப்பர் மார்க்கெட்டில் அசிங்கப்பட்ட பெண்.. அமெரிக்கா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது... இப்படியொரு கடுமையான எச்சரிக்கை விடும் அளவுக்கு அமெரிக்காவில் என்ன நடந்தது? சூப்பர் மார்க்கெட்டில் யாரந்த பெண்? அமெரிக்கா முழுவதுமே இந்த பெண்ணின் வீடியோ வைரலாகி வரும்நிலையில், அங்குள்ள இந்தியர்கள் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகிறார்கள்.. இந்த சம்பவம்தான் அமெரிக்காவில் 2 நாட்களாகவே பேசுபொருளாகி வருகிறது.

சமீப காலமாகவே, அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது கவலையையும், அதிருப்தியையும் உண்டுபண்ணி வருகிறது.. இப்படித்தான் ஏற்கனவே டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் சிக்கினார்..

america embassy india us

கிரீன் கார்டு விண்ணப்பம்

இப்படி ஒருசிலர் செய்யும் தவறுகளால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் விசா நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக, ஹெச்-1பி விசா புதுப்பித்தல், கிரீன் கார்டு விண்ணப்பங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுகிறது.. அதுமட்டுமல்ல, இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது.

இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும், தற்போது ஒரு பெண் திருடி அம்பலப்பட்டுள்ளதும், இதன்மூலம் இந்தியாவின் மானத்தையே வாங்கி கொண்டிருப்பதும், பெரும் கவலையை உண்டுபண்ணி வருகிறது.

சூப்பர் மார்க்கெட்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் டார்கெட் என்ற சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிது.. இங்கு இந்திய பெண் ஒருவர், பொருட்களை வாங்குவதற்காக சென்றிருக்கிறார்.. ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தேடி எடுத்தார்.. கிட்டத்தட்ட 7 மணி நேரம் அதே கடைக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இறுதியில், 767 பொருட்களை ஒரு ட்ராலியில் வைத்து திருடி செல்ல முயன்றுள்ளார்..

ஆனால், அதற்குள் அங்கிருந்த செக்யூரிட்டிகள் இதை பார்த்துவிட்டனர்.. உடனே போலீசாருக்கு தகவல் தந்து, வரவழைக்கப்பட்டனர்.. விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை சுற்றிவளைத்து கைது செய்து, அவர் டிராலியில் வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்..

கெஞ்சுகிறார் அந்த பெண்

அந்த பொருட்களின் மதிப்பு 1,300 டாலர்கள் அதாவது, நம்ம ஊர் மதிப்பில் 1 லட்சத்துக்கு 8 ஆயிரம் ரூபாயாகும்.. இந்தியப் பெண், அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் கைதான சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்துவிட்டது.. போலீசாரின் "பாடி கேம்" வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது..

அந்த வீடியோவில் அப்பெண் பேசும்போது, "இந்த நாட்டை சேர்ந்தவள் கிடையாது.. நான் இங்கேயே இருக்க போவதும் கிடையாது.. ஆனால், நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறேன், எடுத்த பொருள்களுக்கும் பணத்தை தந்துவிடுகிறேன்" என்று அந்த பெண் போலீசாரிடம் கெஞ்சுகிறார்..

அதற்கு பெண் அதிகாரி ஒருவர், "இந்தியாவில் திருடுவதற்கு அனுமதி உண்டா? என்று கேட்பது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..


விருந்தினர் - வெட்கம்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் மீது கடுமையான குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதைடுத்து, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பலரும் அப்பெண்ணின் செயலுக்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்து வருகிறார்கள்.. விருந்தினராக ஒரு நாட்டுக்கு சென்றால், கவுரவமாக நடந்து கொள்ள வேண்டும்.. அதைவிட்டுவிட்டு, அந்நாட்டின் சட்டத்தை மீறுவது வெட்கக்கேடானது.. இந்தியாவின் பெருமையை, உலக அரங்கில் அந்த பெண் கெடுத்துவிட்டார்.

இந்த பெண் செய்த காரியத்துக்காக, மற்ற அமெரிக்கவாழ் இந்தியர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வாய்ப்பு உண்டு.. வெளிநாடுகளில் இந்தியர்கள் வேலை பார்த்தால், அல்லது பயணம் செய்தால், கொஞ்சமாவது பொறுப்புடன் இருக்க வேண்டும், நாட்டின் பெயரை காப்பாற்ற வேண்டும்" என்றெல்லாம் " என்று திட்டி வருகிறார்கள்..

அமெரிக்க தூதரகம் வார்னிங்

இந்நிலையில், அமெரிக்க தூதரகம், விசா குறித்த வார்னிங் ஒன்றை தந்துள்ளது.. அதில், கொள்ளை போன்ற செயல்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவிற்கு உங்களைத் தகுதியற்றதாக செய்யக்கூடும் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதை தடுக்கலாம்.. எனவே, வெளிநாட்டினர் அமெரிக்காவின் சட்டத்தையும், ஒழுங்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை கலந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.

பொதுவாக, அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன. ஆனால் இந்தியர்களை பொறுத்தவரை, இந்த தண்டனைகள் வழங்கப்படுவதற்கு பதில் அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி ரத்து செய்யப்பட்டால் அமெரிக்காவுக்குள் இருப்பது சட்டவிரோதமாகவே கருதப்படும். அதனால்தான், அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.. எனவே, அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுபோன்ற காரியத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+