இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்! அடுத்த ஆப்பு வைக்கும் டிரம்ப்! இந்தியாவின் ஐடி ஏற்றுமதிக்கு கூடுதல் வரி?
நியூயார்க்: இந்தியாவின் ஐடி துறை ஏற்றுமதிகளுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதித்த பிறகு, தற்போது அதன் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. வெளிநாட்டு ரிமோட் பணியாளர்களுக்கு வரி விதிக்கும் இச்செயல், இந்தியாவின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கியமான H-1B விசா திட்டத்தின் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மையமான ஒரு துறையை அச்சுறுத்துவதாக உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பு
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது வரி விதிக்க பரிசீலித்து வருகிறது. இந்தியப் பொருட்களின் மீது கடும் கட்டணங்களை விதித்த பிறகு, அமெரிக்கா தகவல் தொழில்நுட்ப சேவைகள், வெளிநாட்டு ரிமோட் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் வணிக செயல்முறைகள் மீது வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தை, ஐடி துறையை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஐடி துறை பாதிக்கும்
இந்த புதிய வரி விதிப்பு, H-1B விசா அமைப்பை மாற்றியமைக்கும் திட்டங்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், தற்காலிக விசா பணியாளர்கள் அனுப்பும் பணம் மீதான அதிகரித்த வரி விதிப்பு ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய பொறியாளர்கள் மற்றும் மாணவர்களை பாதிக்கக்கூடும். இவர்கள் சிலிக்கான் வேலி மற்றும் அமெரிக்காவில் உள்ள ITES துறையை ஆதரிக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. உலக அளவில் வர்த்தக போர் காரணமாக பொருளாதாரம் சார்ந்துள்ள நிலையில் இந்தியாவின் ஐடி நிறுவனங்களும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS - 4வது காலாண்டில் 1.7% சரிந்து ₹12,224 கோடியாக உள்ளது. அதே சமயம், ஐடி மேஜர் வருவாயில் 5% வளர்ச்சியைப் பதிவுசெய்து ₹64,479 கோடியாக உள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிக குறைவான வளர்ச்சி ஆகும்.
இன்போசிஸ் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.75% குறைந்து ₹7,033 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அதன் ஐடி வருவாய் 8% அதிகரித்து ₹40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
விப்ரோ, அதன் Q4 லாபம் 26% உயர்ந்து ₹3,567 கோடியாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளின் வருவாய் ₹22,504.20 கோடியாக சரிந்து உள்ளது. ஆனால், விப்ரோ உள்ளிட்ட மேஜர் ஐடி நிறுவனங்கள் இப்படி வரிசையாக சரிவை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட பொருளாதார ரீதியாக இந்த நிறுவனங்கள் கிராஷ் ஆகி உள்ளன.
ஐடி துறை பாதிப்பு
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.
மிகப்பெரிய அபாயம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மற்றும் கடுமையான விசா குடியேற்றக் கொள்கைகள் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களை பாதிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும். அதாவது அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் IT நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும். கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும்.
இதை நிவர்த்தி செய்ய, TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவிலேயே ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாம். அதாவது விசா பிரச்சனைகளை சமாளிக்க TCS மற்றும் Infosys போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் நிறுத்தலாம். அமெரிக்காவிலேயே உள்ளவர்களை பணிக்கு எடுக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications