நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ட்ரோன்.. உலகிலேயே எவ்வளவு பயங்கரமானது தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    மூன்றாம் உலக போர் ஏற்படும் அளவுக்கு முக்கியமானவர் ... யார் இந்த சுலைமானி ?

    நியூயார்க்: ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை கொன்ற அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ட்ரோன் உலகின் அதிநவீன பயங்கரமான ட்ரோன் ஆக பார்க்கப்படுகிறது. இந்த ட்ரோன் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பறந்து சென்று கட்டளையை நிறைவேற்றக்கூடியது. எதிரிகளை அழிக்க சிம்ம வாகனமாக இதை அமெரிக்கா பயன்படுத்துகிறது.

    உலகில் மிக அதிநவீன ட்ரோன்களை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அதேநேரம் ஈரானும் கொஞ்சமும் சளைத்தது அல்ல.

    அமெரிக்கா ட்ரோனை பயன்படுத்தி எதிரிநாடுகளை களங்கடிப்பது இப்போது தான் என்றால், ட்ரோனை உலகம் பயன்படுத்துவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தன் படையில் ட்ரோனைவைத்திருந்தது ஈரான்.

    அபாயகரமானது

    அபாயகரமானது

    அப்படி இருந்து ஈரானின் ராணுவ தளபதியையே போட்டுத்தள்ளியிருக்கிறது அமெரிக்கா. அந்த ட்ரோனின் பெயர் தான் MQ-9 ரீப்பர் ட்ரோன். அமெரிக்கா தன்னை பாதுகாக்க வைத்துள்ள ட்ரோன்களிலேயே மிக அபாயகரமானது இது தான். இது இருந்த இடத்தில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து பேரழிவை ஏற்படுத்தும் ஏவுகணை சொல்லும் இடத்தில் வீசிவிட்டு தப்பித்துஓடிவந்துவிடும். திட்டதிட்ட ஜெகஜால திருடனை போல வடிமைத்திருக்கிறார்கள்.

    கழுகைப்போல் பறக்கும்

    கழுகைப்போல் பறக்கும்

    இந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து செல்லும். 2223 கிலோ எடையுள்ள ட்ரோன் 36 அடி நீளமும், 12.5 அடி உயரமும், 66 அடி நீள இறக்கையும் கொண்டது. கிட்டத்தட்ட ராட்சத கழுகைப்போல் இறக்கையை விரித்து பறந்து செல்லும் இந்த ட்ரோன், 1701 கிலோ எடையுள்ள ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை உடலில் சுமந்து கொண்டு செல்லும் திறன் படைத்தது.

    ரேடார்களில் சிக்காது

    ரேடார்களில் சிக்காது

    சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தில் 1850 கிலோமீட்டர் தூரத்திற்கு பறக்கும் என்பதால் எதிரி நாட்டு ரேடார்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சென்று வந்துவிடும். இதற்கு தேவையான எரிபொருளை 2278 லிட்டர் அளவுக்கு ஒரே நேரத்தில் நிரப்ப முடியும். எனவே எரிபொருள் உள்பட எந்த சிக்கலும் தாக்குதல் நடத்துவதற்கு இருக்காது.

    சுயமாகவும் செயல்படும்

    சுயமாகவும் செயல்படும்

    இந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் சுயமாக பறந்து கணக்கச்சிதமாக கட்டளைப்படி இலக்கை குறிவைத்து தாக்கிவிட்டு வந்துவிடும். இருந்த போதிலும் அமெரிக்காவின் படை வீரர்கள் தான் இதை கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுத்துகிறார்கள்.

    சரியான இடத்தை அழிக்கும்

    சரியான இடத்தை அழிக்கும்

    எந்த இடத்தில் யாரை, எவ்வளவு குண்டுகளை வைத்து கொல்ல வேண்டும் என்று சரியான கட்டளைளை பிறப்பித்தால் போதும். மனிதனை போல் சரியாக புரிந்து கொண்டு சரியான நபரை குறிவைத்து குண்டு வீசி கொன்றுவிடும் இந்த MQ-9 ரீப்பர் ட்ரோன். இப்படித்தான் ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை பக்தாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று கொன்று இருக்கிறது.

    இலக்கை நபரை தாக்கும்

    இலக்கை நபரை தாக்கும்

    இந்த MQ-9 ரீப்பர் ட்ரோன் செயற்கைகோள் சமிஞை வழியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்படுகிறது. இலக்கில் இருந்து சில கிலோமீட்டர்தூரம் தள்ளியிருந்து சரியாக குறிவைத்து ஏவுகணை வீசிவிடும். ஏவுகணை வந்து சேர 30 வினாடிகள் போதும். இது ட்ரோன் பறக்கும் உயரம் மற்றும் இலக்கின் தூரத்தை பொறுத்து கொஞ்சம் மாறுபடும்.

    இந்தியாவும் ஆர்வம்

    இந்தியாவும் ஆர்வம்

    ரீப்பர் ட்ரோன் குழுக்கள் ஒருவரை நாட்கள் அல்லது வாரங்கள் பின்தொடரும்போது, அவைகள் இலக்கு திரையில் காட்டப்பட்ட இலக்கு மட்டுமல்ல. அதில் காட்டப்படும் உயிருள்ள மனிதனை காத்திருந்து டார்கெட் செய்து தாக்கும் வல்லமை படைத்தவையாகும். இந்த MQ-9 ரீப்பர் ட்ரோனின் விலை 114 கோடி ரூபாய் ஆக உள்ளது. தற்போது அமெரிக்கா வசம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 93 எம்.கியூ - 9 ரீப்பர் ரக ட்ரோன்கள் உள்ளது. இந்தியாவும் MQ-9 ரீப்பர் ட்ரோன்களை வாங்க ஆர்வம்காட்டி வருவதாக சொல்கிறார்கள்.

    English summary
    Iranian general Qassem Soleimani killed by an MQ-9 Reaper drone : But what does such an operation actually involve?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X