பாகிஸ்தானுக்கு பதிலடி? மொத்த PoKவை கைப்பற்ற திட்டமிடும் இந்தியா? அழிக்கப்படும் பாக். அஸ்திவாரம்
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியா மீட்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உரி தாக்குதலுக்கு பிறகு, 2016-ல் தீவிரவாத ஏவுதளங்களில் தரைவழி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வாமாவுக்குப் பிறகு 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் நடதப்பட்டது. இப்போது பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம்.

கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்:
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியா மீட்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு தான் விரும்பியதைச் செய்வதற்கான ஆயுதங்களும் திறனும் உள்ளது . மேலும் சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து விலகிச் செல்லும் பாகிஸ்தானின் முடிவு காரணமாக PoK க்குள் நுழைவதற்கும், அதை உரிமை கோருவதற்கும் இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்தது இந்திரா காந்தியின் மரபு என்பதால்,.. அதைவிட வலிமையான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மோடி இருக்கிறார். இது நரேந்திர மோடிக்கு கிடைத்த வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது PoK கைபற்றியவர் என்ற பெயர் வந்து சேரும்.
ரஃபேல் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் நமது விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதால், இந்தியா தனது சொந்தப் பகுதியில் இருந்து கொண்டே பாகிஸ்தான் மீது கொடிய தாக்குதலை நடத்த முடியும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தலைவர் அசிம் முனீர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக இந்தியாவால் கருதப்படுகின்றனர்.
பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்துடன் உள்ள தொடர்புகள், அவர்கள் பாகிஸ்தான் அரசுடன் கொண்டு இருக்கும் தொடர்பு, பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதற்கான தெளிவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. இதனால் பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இந்தியா உள்ளது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியா மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக மொத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்தியா மீட்குமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய அட்டாக்
இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும்.
இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும். உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும்.
தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும். இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications