நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யாவை ஆதரித்த மோடி.. ப்ளிங்கன் மூலம் கெஞ்சிய அமெரிக்கா.. இந்தியாவிற்கு எதிராக பிடன் "பெரிய" மூவ்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐநாவில் நடந்த 4 வெவ்வேறு விதமான வாக்கெடுப்புகளில் இந்தியா ரஷ்யாவை எதிர்க்காமல் நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது நடுநிலை என்று கூறப்பட்டாலும் ஒரு வகையில் மறைமுகமான ரஷ்ய ஆதரவு என்றே உலக நாடுகளால் வர்ணிக்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கண்டன தீர்மானம் அமெரிக்கா மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் நடுநிலையோடு இருக்கவே முடிவு செய்கிறோம்.

திமுக கூட்டணியில் சிபிஐக்கு திருப்பூர் துணை மேயர், 1 நகராட்சி, 3 பேரூராட்சி தலைவர்கள் பதவி ஒதுக்கீடுதிமுக கூட்டணியில் சிபிஐக்கு திருப்பூர் துணை மேயர், 1 நகராட்சி, 3 பேரூராட்சி தலைவர்கள் பதவி ஒதுக்கீடு

இரண்டு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த முயல்கிறோம் என்று இந்தியா தெரிவித்தது. அதன்பின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்னொரு கூட்டம், ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஆகியவற்றில் கூட இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

உக்ரைன் வாக்கெடுப்பு

உக்ரைன் வாக்கெடுப்பு

இதையடுத்து உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் நேற்று ஐநா பொது சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த வாக்கெடுப்பு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. ரஷ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யாவிற்கு ஆதரவாக 5 நாடுகள் வாக்களித்தது. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்தியா

இந்தியா

மேற்கு உலக நாடுகள் எல்லாம் மொத்தமாக ரஷ்யாவை எதிர்க்கின்றன. 130+ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக இருக்கின்றன. ஆனால் மேற்கு உலக நாடுகளுக்கு நெருக்கமான இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. ரஷ்யாவை இந்தியா நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக ஆதரித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஆதரவு நிலைப்பட்டால் இந்தியா மீது அமெரிக்கா கோபம் அடையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்த பெலாரஸ் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது போல இந்தியா மீதும் விதிக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் டொனால்ட் லியு இது தொடர்பாக நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கூட்டத்தில் பேசினார். பல்வேறு செனட்டர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அவர் இந்தியாவின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு பற்றி பேசினார். நேற்று ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என்று ஐநா பொது சபையில் இந்தியா அறிவித்த பின் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டொனால்ட் லியு, இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது.

அமெரிக்கா முயன்றது

அமெரிக்கா முயன்றது

பிடன் அரசு இந்தியாவை ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க கடுமையாக முயன்றது. ஆனால் இந்தியா எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்தியா தற்போது நடுநிலையாக இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் உண்மையில் இந்தியா வெற்றிபெறும் நபர்களின் பக்கம் இருக்க பார்க்கிறது. போர் முடிந்த பின் வெற்றிபெறும் நபர்களின் பக்கம் இருக்க இந்தியா விரும்புகிறது. ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமை

ஒற்றுமை

இப்படிப்பட்ட நேரத்தில்தான் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உறுதியாக நாம் ரஷ்யாவிற்கு எதிராக ஒன்று சேர வேண்டும். புடினின் வாழ்க்கையை நாம் எல்லோரும் சேர்ந்து நரகம் ஆக்க வேண்டும். பல செனட்டர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டால் குழம்பிப் போய் உள்ளனர். இந்தியா ரஷ்யா இடையே ஆயுத உறவு உள்ளது. ஆனால் இந்த உறவு காரணமாக இந்தியா தனது மதிப்புகளை இழந்து விட கூடாது என்று இந்த கூட்டத்தில் பேசப்பட்டது .

 ஜனநாயக நாடு

ஜனநாயக நாடு

இந்தியா உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு. உலகின் மற்ற ஜனநாயக நாடுகளோடு இணைந்து இந்தியா உக்ரைனை ஆதரித்து ரஷ்யாவை எதிர்க்க வேண்டும் என்று டொனால்ட் லியு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் சிலர் இந்தியா ரஷ்யாவிடம் எஸ் 400 வகை ஏவுகணை மறிப்பு சிஸ்டத்தை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். Countering America's Adversaries Through Sanctions Act (CAATSA) எனப்படும் தடை இந்தியா மீது விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

பொருளாதார தடை

பொருளாதார தடை

அதாவது பொருளாதார தடை கொண்ட நாட்டிடம் இருந்து பொருள் வாங்கினால் வாங்கும் நாடுகள் மீதும் சில வகையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும். அப்படி இந்தியா மீது விதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டொனால்ட் லியு, அது பிடன் கையில்தான் இருக்கிறது. அவர் நினைத்தால் சில விலக்குகளை கொடுக்கலாம்.

ரஷ்யா ஆதரவு

ரஷ்யா ஆதரவு

ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை நிறுத்த அமெரிக்க உள்துறை அமைச்சர் பிளிங்கன் மூலம் முயன்றோம். ஆனால் முடியவில்லை. இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி இன்னும் ரத்தமின்றி போகவில்லை. அந்த கேள்வி இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது அது பரிசீலனையில் இருக்கும் ஒரு விஷயம்தான் . இந்தியா மீதான பொருளாதார தடை பற்றி பிடன்தான் முடிவு எடுக்க வேண்டும். நானே முன்கூட்டியே எதையும் பேச விரும்பவில்லை.

Recommended Video

    உங்க அணு ஆயுதத்தை தூக்கிட்டுப் போங்க.. America-வுக்கு Russia எச்சரிக்கை
    அவர் முடிவு

    அவர் முடிவு

    அவர் முடிவு எடுக்கும் முன் நானே எதுவும் சொல்ல விரும்பவில்லை. இருப்பினும் இந்தியா எங்களுக்கு நெருக்கமான நாடு. எங்களுக்கு மிக முக்கியமான நட்பு நாடு. எங்கள் உறவு இப்படியே நீடிக்கும் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார். இந்தியா மீதான பொருளாதார தடை பற்றி இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும், அது ஒரு பக்கம் "considering" என்ற பரிசீலனை நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் பிடன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதே கேள்வியாக உள்ளது.

    English summary
    It is still being considered says US diplomat on the US sanction against India for supporting India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X