தம்மாதுண்டு எறும்பு போதும்! நயா பைசா செலவின்றி 10 நிமிடத்தில் கேன்சரை கண்டுபிடிக்கலாமாம்! எப்படி?

ஏற்கெனவே நாய்கள் மூலம் புற்று நோய் பாதிப்புகளை கண்டறிய முடியும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது எறும்புகளை கொண்டும் இதனை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மனிதர்களின் சிறுநீரை வைத்து எறும்புகளை கொண்டு அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? என்பதை சுலபமாக கண்டறியலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி நம்மில் 6 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தகவலின்படி சுமார் 1 கோடி பேர் உலகம் முழுவதும் இந்த புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அதனை சரி செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதனை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு அதிக செலவாகும் என்பதால் சாமானிய மக்கள் பலர் இதனை பரிசோதிப்பதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் பிரதானமாக 25 புற்றுநோய் பரிசோதனை செய்வதற்கு ரூ.7 ஆயிரம் வரை கட்டணமாக பெறப்படுகிறது. ஆனால் பல சாமானியர்களின் வீட்டு வாடகை தொகையை விட இது அதிகம். இந்நிலையில்தான் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர்கள் எறும்பை கொண்டு புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர்.

நாய்கள்

நாய்கள்

இதேபோல இதற்கு முன்னர் நாய்களை கொண்டு இதுபோல புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அதற்காக நாய்களை குறைந்தது 6 மாதங்கள் வரை பழக்கி பயிற்சி கொடுக்க வேண்டும். அதேபோல ஒரு சில குறிப்பிட்ட நாய் இனங்கள் மட்டுமே இது வரை இந்த புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக இந்த வழிமுறையும் புற்றுநோயை கண்டுபிடிக்க நீண்ட காலத்தையும், அதிக பணச்செலவையும் கோரும் முறையாக இருந்தது. இந்நிலையில் எறும்பை கொண்டு புற்று நோயை கண்டுபிடிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறியிருப்பது சாமானிய மக்களுக்கிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு

ஆய்வு

ராயல் சொசைட்டி பி: உயிரியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, "புற்றுநோய் கட்டிகள் கொந்தளிப்பான கரிம சேர்மங்களை ரசாயனங்களாக வெளியிடுகின்றன. இந்த ரசாயனங்கள் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். இதை வைத்துதான் நாய்கள் புற்றுநோய் பாதிப்புகளை கண்டுபிடிக்கின்றன. ஆனால் எறும்புகளுக்குதான் மூக்கே கிடையாதே இது எப்படி கண்டுபிடிக்கும் என்று கேட்கிறீர்களா? எறும்புகளுக்கு மூக்கு இல்லையென்றாலும், அதன் கொம்புகள் மிகுந்த உணர் திறன் கொண்டவையாகும். அதாவது இந்த கொம்புதான் எறும்புகளுக்கு மூக்கு.

மோப்ப சக்தி

மோப்ப சக்தி

இந்த கொம்புகள் வழியாக நாயை விட அதிக அளவில் எறும்பால் மோப்பம் பிடிக்க முடியும். எனவே இந்த எறும்புகளை ஒரு பக்கம் அடைத்து வைத்து, மறுபக்கத்தில் மார்பக புற்றுநோய் துண்டுகளை எலியின் உடலில் ஒட்டி அந்த எலிகளையும் சாதாரண எலிகளையும் தனித்தனியாக கண்ணாடி கூண்டுகளில் அடைத்து வைத்தோம். இப்போது இந்த கூண்டிற்குள் ஃபார்மிகா ஃபுஸ்கா வகை எறும்புகளை அனுப்பினோம். இந்த எலிகளின் சிறுநீர் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு துளி சர்க்கரை கரைசல் தண்ணீர் விடப்பட்டது. எறும்பு இந்த சர்க்கரை கரைசலை சரியாக மோப்பம் பிடித்து விட்டது.

சோதனை

சோதனை

மொத்தமாக 35 எலிகளுக்கு 35 எறும்புகள் பயன்படுத்தப்பட்டதில், சில எறும்புகள் சர்க்கரை கரைசலை சரியாக அடையாளம் கண்டு சாப்பிட்டுவிட்டது. ஆனால் சில எறும்புகள் இதனை அடையாளம் கண்டாலும் அதன் அருகிலேயே நீண்ட நேரம் சுற்றி சுற்றி வந்திருக்கிறது. இதனையடுத்து நாங்கள் சில விஷயங்களை உறுதி செய்தோம். அதாவது புற்று நோய் உள்ள எலிகளின் சிறுநீரின் அருகில் உள்ள சர்க்கரை கரைசலை எறும்புகள் சாப்பிடவில்லை என்பதுதான் அது. இதனை திரும்ப திரும்ப செய்து பார்த்ததில் எறும்பு ஒவ்வொரு முறையும் புற்று நோய் பாதிப்பு உள்ள எலிகளை சரியாக அடையாளம் காட்டியுள்ளது" என்று ஆய்வாளர்கள் அறிவியல் இதழில் கூறியுள்ளனர்.

கில்லாடி எறும்புகள்

கில்லாடி எறும்புகள்

இது குறித்து பாரிஸின் 'சோர்போன் பாரிஸ் நோர்ட் பல்கலைக்கழகத்தின்' பேராசிரியர் பேட்ரிசியா டி எட்டோரே கூறுகையில், "நாய்களை வைத்து கூட இது போன்று கண்டுபிடிக்க முடியும் ஆனால், அவற்றிற்கு கூடுதல் கால அவகாசம் தேவை. குறைந்தபட்சம் 6 மாதமாவது அவைகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எறும்புகள் கில்லாடிகள். அவைகள் மிகவும் சீக்கிரமாகவே அனைத்தையும் கற்றுக்கொள்கின்றன. மட்டுமல்லாது எறும்பை நாம் எங்கும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. தற்போது இந்த ஆய்வு மனிதர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது. இது வெற்றியடைந்தால் உலகில் மாபெரும் மருத்துவ மாற்றங்கள் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+