Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஒரு பக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் பனிமூட்டம்... மறுபக்கம் அமெரிக்கா - ஈரான் இடையே அனல் பறக்கும் பேச்சுவார்த்தை. சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்த 'மாரத்தான்' விவாதத்தின் முடிவில், உலகமே எதிர்பார்த்த அந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நிமிடத்தில் வந்த அந்த 'ஒரு போன் கால்' மொத்த கதையையும் மாற்றிவிட்டது.

Pakistan USA Iran

திசை திருப்பிய நெதன்யாகு?

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நடந்த இந்த ரகசியப் பேச்சுவார்த்தை திடீரென முறிந்ததற்குக் காரணம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தான் என வெடிகுண்டை வீசியிருக்கிறார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி (Seyed Abbas Araghchi).

"வான்ஸ் பேச்சுவார்த்தை மேசையில் இருந்தபோது, நெதன்யாகுவிடமிருந்து வந்த அந்த அழைப்பு அமெரிக்காவின் கவனத்தை அப்படியே இஸ்ரேலின் பக்கம் திருப்பியது. போர்க்களத்தில் சாதிக்க முடியாததை, பேச்சுவார்த்தை மேசையில் சாதிக்க அமெரிக்கா முயல்கிறது" என எக்ஸ் (X) தளத்தில் கார காட்டமாகப் பதிவிட்டுள்ளார் அராக்ஷி.

உடைந்து போன 21 மணிநேர நம்பிக்கை!

இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் முழு நம்பிக்கையுடன் பங்கேற்றதாகவும், ஆனால் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகள் 'நியாயமற்றவை' என்றும் ஈரான் தரப்பு கூறுகிறது.

அமெரிக்காவின் அந்த 'அதிர்ச்சி' லிஸ்ட்:

ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கக் கப்பல்களுக்கு முழு சுதந்திரம்.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை மொத்தமாக முடக்க வேண்டும்.

கையிருப்பில் உள்ள யுரேனியத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.

இதை அமெரிக்காவின் "இறுதி மற்றும் சிறந்த ஆஃபர்" (Final and best offer) என ஜே.டி.வான்ஸ் சொல்ல, "இது பேச்சுவார்த்தை அல்ல, மிரட்டல்" என ஈரான் முறுக்கிக்கொள்ள... விவகாரம் 'புஸ்' ஆகிப்போனது.

பற்றிக்கொள்ளும் கச்சா எண்ணெய் விலை!

இந்த மோதலால் உலக நாடுகளின் வயிறு எரியத் தொடங்கியிருக்கிறது. ஏப்ரல் 9-ம் தேதி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிய இன்னும் 9 நாட்களே உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் போக்குவரத்து கிட்டத்தட்ட 'ஜீரோ' நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 95 டாலருக்குக் குறைந்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த செய்தி வெளியானதும் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்கிறது. போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தால், எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டி எகிறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுகிறதா?

டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அதிரடிப் போக்கால் நேட்டோ (NATO) நாடுகளுக்குள்ளேயே விரிசல் விழுந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் இத்தாலி: "ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு எங்கள் வான்வெளியைப் பயன்படுத்த விடமாட்டோம்" என வெளிப்படையாகவே மறுத்துவிட்டன.

வளைகுடா நாடுகள்: அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்களான அரபு நாடுகளும் இந்தப் போரில் தலையிடத் தயக்கம் காட்டி வருகின்றன.

அமெரிக்கா தனி ஆளாக ஹார்முஸ் ஜலசந்தியில் சுரங்கங்களை அகற்ற (Mine clearing) தனது போர்க்கப்பல்களையும் ட்ரோன்களையும் களமிறக்கத் தயாராகி வருகிறது.

"எங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எதற்கும் தயார்" என ஈரான் கர்ஜிக்க... "கடல் வழிப் பாதையை முடக்கினால் சீனா மீது 50% வரி விதிப்போம்" என ட்ரம்ப் மிரட்ட... மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

அடுத்த 9 நாட்களில் ஏதேனும் அதிசயம் நடக்குமா? அல்லது 'நெதன்யாகுவின் அந்த போன் கால்' ஒரு பெரும் போருக்கு அச்சாரமாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+