நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செவ்வாய் கிரகத்தில் தெரிந்த.. ராட்சச கரடி உருவம்.. அந்த வாயை பாருங்க.. அதிர்ந்த நாசா.. பரபர போட்டோ

செவ்வாய் கிரகத்தில் தெரிந்த உருவம் ஒன்று நாசா விஞ்ஞானிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தின் தரை பகுதியில் பிரம்மாண்ட கரடி உருவம் தெரிந்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு விண்வெளி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். நாசாவின் பல்வேறு ஆராய்ச்சி விண்கலன்கள், probe கருவிகள், தொலைநோக்கிகள் உதவியுடன் இதுபோன்ற வியக்க வைக்கும் புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா ஒரு ஆச்சர்யம் அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் நாசா தொடர் ஆய்வுகளை செய்து வரும் நிலையில்தான் இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

மணிக்கு 21,506 கிமீ வேகம்.. பூமியை தாக்க வரும் சிறுகோள்..பேராபத்து ஏற்படுமா? நாசா பகீர் தகவல்-என்ன? மணிக்கு 21,506 கிமீ வேகம்.. பூமியை தாக்க வரும் சிறுகோள்..பேராபத்து ஏற்படுமா? நாசா பகீர் தகவல்-என்ன?

 நாசா

நாசா

மார்ஸ் ஆய்வை நாசா தற்போது துரிதப்படுத்தி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் ராக்கெட்டுகள் உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு தொடர் பயணங்களை வரும் காலங்களில் மேற்கொள்ள நாசா திட்டமிட்டு உள்ளது. பொதுவாக நிலவு, செவ்வாய் கிரகம் தொடங்கி பல கோள்கள், துணை கோள்களில் பெரிய குழிகள் காணப்படும். இந்த குழிகள் பல காரணங்களுக்காக ஏற்படும். இப்படி கிரகங்களில் காணப்படும் குழிகளை crater என்று அழைப்பார்கள். நிலவில் நாம் காணும் வடை சுடும் பாட்டியும் கூட இந்த crater குழிகள்தான். சரி விஷயத்திற்கு வருவோம் செவ்வாய் கிரகத்திலும் இப்படி நிறைய கிரேட்டர்கள் உள்ளனர். இது தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவாதம்

விவாதம்

இந்த நிலையில்தான் செவ்வாய் கிரகத்தின் தரை பகுதியில் பிரம்மாண்ட கரடி உருவம் தெரிந்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. NASA's Mars Reconnaissance Orbiter எனப்படும் ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் குழிகளின் புகைப்படம் ஆகும் இது. இந்த புகைப்படத்தில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. இவை ஒரே நேர்கோட்டில் சரியாக காணப்படுகின்றன. இவை பார்க்க அப்படியே கண்கள் போல காணப்படுகிறது.

உட்பக்கம்

உட்பக்கம்

அதன் கீழ் பகுதியில் பெரிய இன்னொரு குழி காணப்படுகிறது. இந்த குழி இன்னும் ஆழமாகவும், நீளமாகவும் காணப்படுகிறது. இது பார்க்க அப்படியே வாய் மற்றும் மூக்கு பகுதி போலவே இருக்கிறது. இதெல்லாம் போக இன்னொரு வட்டமும் இதை எல்லாம் சுற்றி காணப்படுகிறது. இதை எல்லாம் உள்ளடக்கிய வட்டம் அதை சுற்றி காணப்படுகிறது. இதை எல்லாம் சேர்த்து பார்க்கும் போது அப்படியே பார்க்க கரடியின் முகம் போலவே இருக்கிறது. இதனால்தான் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

எப்படி எடுத்தனர்

எப்படி எடுத்தனர்

இது இயற்கையாக ஏற்பட்ட குழிதான். மற்றபடி செவ்வாய் கிரகத்தில் உண்மையில் கரடி எல்லாம் இல்லை. இது வெறுமனே உருவம். நிலவில் பாட்டி இருப்பது போல தோன்றுகிறதே.. அதேபோல்தான் இதுவும் கரடி உருவம் போல தோன்றுகிறது. NASA's Mars Reconnaissance Orbiter எனப்படும் ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் இருக்கும் HiRise (High Resolution Imaging Experiment) எனப்படும் கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் இடம் பெற்றுள்ளது. அங்கே இருந்த எரிமலைகள் காரணமாக இந்த குழிகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Nasa found a marvelous picture of a huge bear face from Mars: Netizens are amused.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X