அவ்வளவுதான் எல்லாம் ஓவர்.. சோலி முடிஞ்சது! டிரம்பிற்கு மெசேஜ் அனுப்பிய டாப் தலை.. இந்தியா அடித்த அடி
நியூயார்க்: அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான தனிப்பட்ட உறவு தற்போது சிதைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருட்கள் மீதான டிரம்பின் வர்த்தக வரிகள் தொடர்பான பதட்டமான சூழலில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் ஊடகமான எல்.பி.சி-க்கு அளித்த பேட்டியில் போல்டன், "டிரம்புக்கு மோடியுடன் தனிப்பட்ட முறையில் மிக நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன், எல்லாம் ஓவர்.. இது அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக, (பிரிட்டிஷ் பிரதமர்) கெய்ர் ஸ்டார்மருக்கு இது பெரிய பாடம். டிரம்ப்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக்கூடும், ஆனால் அது உங்களை மோசமானவற்றிலிருந்து பாதுகாக்காது" என்று கூறினார்.

டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோடி மோதல்
தனிப்பட்ட உறவு உங்களை எப்போதும் பாதுகாக்காது. அரசு உறவு வேறு, ராஜங்க உறவு வேறு.. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால்தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
டிரம்ப் சர்வதேச உறவுகளை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் உலக அரசியலை பார்க்கிறார் என்று நான் நினைக்கிறேன. எனவே, அவருக்கு விளாடிமிர் புடினுடன் நல்ல உறவு இருந்தால், அமெரிக்காவுக்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு இருக்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால், அது உண்மை இல்லை. டிரம்ப் - மோடி இடையே நல்ல உறவு இருந்தும் கூட இந்தியா - அமெரிக்கா இடையே உறவு இல்லை, என்று அவர் கூறி உள்ளார்.
ஹூஸ்டனில் நடந்த "ஹவுடி மோடி" பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த மோடி-டிரம்ப் இடையேயான உறவுகள்.. இப்போது மோசமாகி உள்ளது.. இரண்டு நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்து உள்ளது.. அது மட்டுமல்ல இரண்டு தலைவர்களின் உறவு மோசமான சரிவை அடைந்து உள்ளது., என்று அவர் கூறி உள்ளார். டிரம்புடன் வலுவான தனிப்பட்ட உறவு தற்காலிக நன்மைகளை வழங்கக்கூடும், ஆனால் அது அவரது முடிவுகளின் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்காது என்று இங்கிலாந்தின் கெய்ர் ஸ்டார்மர் உட்பட மற்ற தலைவர்களுக்கும் போல்டன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா அமெரிக்கா மோதல்
ஏப்ரல் 2018 முதல் செப்டம்பர் 2019 வரை டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய போல்டன், முன்னாள் அதிபரின் வெளியுறவுக் கொள்கை குறித்த தனது கருத்துக்களை அடிக்கடி வெளிப்படுத்தியுள்ளார். டிரம்பால் நியமிக்கப்பட்ட எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் பட்டேலின் உத்தரவின் பேரில், ஆகஸ்ட் மாதம் போல்டனின் வீடு சோதனை செய்யப்பட்டது. டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், பெய்ஜிங்கில் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் மோடி காணப்பட்டார்.
முக்கியமாக எஸ்சிஓ கூட்டத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் - ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. இவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படம் அமெரிக்க அரசியலை உலுக்கி உள்ளது. உலக அரசியலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது. எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்ட முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், "வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் டொனால்ட் டிரம்ப்பிற்கு மாற்றாக பெய்ஜிங் தன்னைக் காட்டிக்கொண்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications