கைகளில் விலங்கு.. சங்கிலி மூலம் கட்டப்பட்டு.. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட.. 7300 பேர்!
நியூயார்க்: அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆட்சி பொறுப்பிற்கு வந்த முதல் 10 நாட்களில் 7,300 சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தி உள்ளது. கைகளில் விலங்கிட்டு, செயின் மூலம் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டு போர் விமானங்களில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் நாடுகளுக்கு முதல் கட்டமாக கடத்தப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலர் இப்படி வெளியேற்றப்படலாம். இப்படி வெளியேற்றப்பட்ட பலர் கிரிமினல்கள்.

இதனால் அவர்கள் கைகளில் விலங்கிட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார்.
அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர்.
இவர்களை எல்லாம் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. அங்கே உள்ளே அகதிகளை, அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றும் பொருட்டு அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
டிரம்ப் பதவிக்கு வந்து சரியாக 5 நாட்களுக்குள் பெரிய அளவில் அங்கே ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளன. தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.
மின்சார வேலிகள்:
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே அவர் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
விமானம்:
இந்த நிலையில்தான் அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார். கொலம்பியா மக்களை அந்நாட்டிற்கு திரும்பி அனுப்ப அமெரிக்க விமானப்படை விமானம் தயாராக இருந்தது.
ஆனால் இதை தரையிறங்க அனுமதிக்க மாட்டோம் என்று கொலம்பியா அரசு கூறி விட்டது. இதையடுத்து பிளைட்டை தரையிறங்க விடுங்க.. இல்லைனா வரி கூடிக்கிட்டே போகும் என்று எச்சரித்த டிரம்ப் கொலம்பியாவின் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதையடுத்து வேறு வழியின்றி அமெரிக்காவில் இருந்து வரும் அகதிகள் விமானத்தை கொலம்பியா ஏற்றுக்கொண்டுள்ளது.
அதோடு அமெரிக்காவில் இருந்து கொலம்பியா மக்களை வெளியேற்ற அதிகாரபூர்வமாக கொலம்பியா அரசே விமானங்களை அனுப்பி உள்ளது. டிரம்ப் விதித்த வெறியால் அச்சம் அடைந்து வேறு வழியின்றி கொலம்பியா இறங்கி வந்துள்ளது.
வெறும் 24 மணி நேரத்தில் கொலம்பியா டிரம்பின் அதிரடி காரணமாக இறங்கி வந்துள்ளது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications