கடைசியில் வென்றது என்னவோ.. புடின் தான்.. ஜெலன்ஸ்கியை அசிங்கப்படுத்திய டிரம்ப்.. ரஷ்யா மகிழ்ச்சி
நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா போரில் என்ன முடிவாக போகிறது .. இனி என்ன நடக்க போகிறது என்பது நேற்று நடந்த வெள்ளை மாளிகை சம்பவத்திற்கு பின் உறுதியாகிவிட்டது. இனி இந்த விவகாரத்தில் ரஷ்யாதான் உச்சத்தில் இருக்க போகிறது. அமெரிக்காவை நம்பி அண்ணன் ரஷ்யாவை பகைத்துக்கொண்ட உக்ரைன் இப்போது வேறு வழியில்லாமல் சர்வதேச மேடையில் அசிங்கப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உக்ரைனும், ரஷ்யாவும் வரலாறுபடி பங்காளிகள். எல்லோரும் சோவியத் யூனியனுக்கு கீழ் ஒன்றாக இருந்தனர். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. ஆனால் அப்போதில் இருந்து உக்ரனை எப்படியாவது தனது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா முயன்று வருகிறது.

முதலில் உக்ரைன் பிரதமர்களை கட்டுப்படுத்தி ரஷ்யா நிழல் ராஜ்ஜியம் நடத்தியது. ஆனால் அதன்பின் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கும் அரசியல் தலைவர்களை உக்ரைன் மக்கள் தூக்கி வீசினார்கள். இதனால் உக்ரைன் மீது ஆயுத போர் நடத்தி அந்த நாட்டை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. ஏற்கனவே 2014ல் உக்ரைனின் கிரிமியாவை கைப்பற்றிய ரஷ்யா அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிரிமியா போலவே உக்ரைனின் மற்ற பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்ற முயன்று வருகிறது.
அமெரிக்கா எடுத்த முயற்சியால் போர்
சரி நல்லா இருக்கும் உக்ரைனை ஏன் ரஷ்யா கைப்பற்ற முயல்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே அமெரிக்கா மட்டும் சும்மா இல்லை. சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளை அமெரிக்கா தனது நேட்டோ படையில் இணைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா சேர்ந்து இப்படி நேட்டோ படைகளில் முன்னாள் சோவியத் நாடுகளை இணைத்து நேட்டோவை விரிவாக்கி உள்ளது. லத்திவியா, லித்துவானியா, ஈஸ்டானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ஜார்ஜியா உள்ளிட்ட ரஷ்யாவிற்கு அருகே இருக்கும் எல்லைப்புற நாடுகள் எல்லாம் இப்போது நேட்டோ வசம்.
இரண்டாம் உலகப்போர் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது.. அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர் 1989லேயே முடிந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்கா ஐரோப்பா இந்த நேட்டோ படையை கலைக்காமல் அதை விரிவாக்கி வருகிறது. அதோடு நேட்டோ படைகளை விரிவாக்கி அதை ரஷ்ய எல்லை வரை அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைனையும் அமெரிக்கா நேட்டோவில் சேர்க்க திட்டமிட்டு வந்தது. அப்படி நடந்தால் அவ்வளவுதான் ரஷ்யாவை பூகோள ரீதியாக அமெரிக்காவின் நேட்டோ.
ரஷ்யாவின் கோபத்திற்கு காரணம்
இது ரஷ்யாவை நிர்மூலமாக்கும். இதை ரஷ்யா பொறுக்க முடியாமல்தான் தொடக்கத்தில் வார்னிங் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தவில்லை. விளைவு தற்போது ரஷ்யா உக்ரைன் உள்ளே புகுந்துள்ளது... ஆனால் இது உக்ரைனோடு முடியாது. நேட்டோவில் இருக்கும் மற்ற சோவியத் நாடுகள், மற்ற ரஷ்யாவின் அண்டை நாடுகளை இதே போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றும் அபாயம் உள்ளது. அதாவது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் நாடுகளை கைப்பற்ற துடித்தது போல இது மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகி உள்ளது. இதையடுத்தே ரஷ்யா உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு இறங்கியது.
கைப்பற்றப்பட்ட உக்ரைனின் பெரும் பகுதிகள்
இந்த போரில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் உக்ரைனில் 10 சதவிகித பகுதிகளை ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த போரின் ஒரு கட்டமாக அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா - அமேரிக்கா நட்பானதால் உக்ரைன் கழற்றி விடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு உள்ளது.
அவமானப்படுத்தப்பட்ட உக்ரைன்
இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பு இருவருக்கும் இடையில் கடுமையான மோதலில் முடிந்தது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்சை நோக்கி உக்ரைன் அதிபர் கேள்விகளை வைத்ததே இந்த சண்டைக்கு காரணம் ஆகும். நேற்று வான்ஸ் பேசுகையில், அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும், என்றார்.
இதை கேட்டு கோபப்பட்ட ஜெலன்ஸ்கி, ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்? போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும், என்றார்.
இதற்கு பதிலடி தந்த அதிபர் டிரம்ப் - உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை, நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.
இதற்கு கோபமாக பதில் சொன்ன ஜெலன்ஸ்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி என்றுள்ளார்.
டிரம்ப் - அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. டீல் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications