நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நெத்தி அடி".. கடைசி போட்டியில்.. பிரபஞ்ச அழகி டக்குனு சொன்ன பதில் என்ன தெரியுமா.. மலைத்துபோன மக்கள்

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கேப்ரியல்லா அமெரிக்காவின் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: 2022-ம் ஆண்டுக்கான, "மிஸ் யுனிவர்ஸ்" பட்டத்தை அமெரிக்க அழகியான ஆர் போனி கேப்ரியல் பெற்றுள்ளார்.. இதையடுத்து, இணையத்தில் கேப்ரியல் பற்றின செய்திகள் வைரலாகி கொண்டிருக்கின்றன.

2022ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது.. இந்த போட்டியின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று முன்தினம் அதாவது 14ந்தேதி நடந்தது.

இது 71வது பிரபஞ்ச அழகி போட்டியாகும்... இந்தப் போட்டியில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டனர்... இதில், ஃபைனல் சுற்றுக்கு அமெரிக்கா, வெனிசுலா, டொமினிக் குடியரசு நாடுகளை சேர்ந்த அழகிகள் முன்னேறினர்...

 சாலை முழுக்க பணம்.. எல்லாமே புதிய ரூ.500 நோட்டுகள்.. மிரண்ட போலீஸ்.. நள்ளிரவில் நடந்தது என்ன சாலை முழுக்க பணம்.. எல்லாமே புதிய ரூ.500 நோட்டுகள்.. மிரண்ட போலீஸ்.. நள்ளிரவில் நடந்தது என்ன

ஃபர்ஸ்ட் பரிசு

ஃபர்ஸ்ட் பரிசு

இறுதியில், அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல் என்பவர் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார். அவருக்கு கடந்த வருடம் பிரபஞ்ச அழகியான இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து, கிரீடம் அணிவித்து பட்டத்தை அளித்தார்.. ரூ.45 கோடி மதிப்பிலான கிரீடம் அது.. இந்த போட்டியில் 2வது இடத்தை வெனிசுலாவின் டயானா சில்வாவும், டொமினிகன் குடியரசின் அமி பெனா என்பவரும் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.. இந்த போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட திவிதா என்பவர் பங்கேற்றிருந்தார்.. அவர் 16வது இடத்தை பிடித்தார் என்றாலும், 'சோன் சிரியா' உடையணிந்து வந்து, உலக மக்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்திருந்தார்.

முதல் பரிசு

முதல் பரிசு

முதல் பரிசை வென்ற கேப்ரியேலுக்கு 28 வயதாகிறது.. இறுதி சுற்றில் வெற்றிக்கான கேள்வியும், அதற்கு கேப்ரியல் தந்த பதிலும்தான், இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.. அந்த கேள்வி என்ன தெரியுமா? "நீங்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றால், அதன் மூலம் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் எப்படி செயலாற்றுவீர்கள்?" என்று கேப்ரியலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேப்ரியல், "நான் மாற்றத்திற்கான தலைவராக செயல்படுவேன்... டிசைனிங் மற்றும் தையல் தொழில் நான் 13 வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன்.. நன்மைக்கான ஆற்றலாக நான் ஃபேஷன் தொழிலை பார்க்கிறேன்.

கேப்ரியலா

கேப்ரியலா

சுற்றுசூழலுக்கு மாசு வராதபடி, மறுசுழற்சி முறையிலான பொருள்களையே நான் தையல் தொழிலில் பயன்படுத்துகிறேன். இதைதவிர, குடும்ப வன்முறை, கடத்தல் போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை, நான் மீட்டு, அவர்களை பணியில் ஈடுபடுத்துகிறேன். பிறர் வாழ்வில் மாற்றத்திற்கான விதையை விதைத்து, அவர்களை மாற்றிக்காட்டுவதன் மூலம், நாம் மாற்றத்தின் கருவியாக இருக்கிறோம்" என்றார்.. கேப்ரியலாவன் இந்த பதில்தான், அவரை பிரபஞ்ச அழகியாக உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது..
அமெரிக்கர்கள் வம்சாவளியை சேர்ந்தவராம் கேப்ரியல்.. மாடலிங் செய்து வருபவர்.. ஃபேஷன் டிசைனர், டெய்லரிங் டிரெயினராகவும் இருக்கிறார்... தன்னுடைய பணிகளில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் தந்ததுதான், இன்று அவரை உலக அளவில் பேச வைத்திருக்கிறது.

நழுவுகிறாரா

நழுவுகிறாரா

வழக்கமாக, உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் அழகுப் பெண்களிடம் கேட்கப்பட்ட சில அதிரடி கேள்விகள்தான், அவர்களின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமையும்.. அதாவது, உலக அழகிப் போட்டி என்பது வெறும் உடல் அழகிற்கானது மட்டுமல்ல என்பதை விளக்கக்கூடிய வகையில் அந்த கேள்விகள் அமைந்து வருகின்றன.. போட்டியில் பங்கேற்பவர்களின் புத்திசாலித்தனம், பண்புகள், சேவை மனப்பான்மை போன்ற அம்சங்களை சோதிப்பதற்காக இத்தகைய அதிரடி கேள்விகள் கேட்கப்படும்... அதற்கு நழுவிக் கொள்ளாமலும், சரியாகவும், சாதுரியமாகவும் பதில் சொல்பவர்களே அழகி பட்டம் வெல்கிறார்கள். இப்படித்தான், நம் இந்திய அழகி சுஷ்மிதாசென்னிடம் 1994-ல், "பெண்ணின் சிறப்பம்சங்கள் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது..

உறுப்பு - கேள்வி

உறுப்பு - கேள்வி

அதற்கு சுஷ்மிதாசென், பெண்ணாக இருப்பது கடவுளின் பரிசு. அதை அனைவரும் உணர வேண்டும். பெண்ணின் வழியே உயிர்கள் தோன்றுகின்றன. அது ஆணாக இருந்தாலும் தாயானவள் அக்கறையுடன் அன்பு செலுத்துவாள். நேசிப்பாள். அதுவே பெண்மையின் சிறப்பு என்று கூறியிருந்ததுடன், பட்டத்தையும் வென்றிருந்தார். அதேபோல, கடந்த 2011-ல் உலக அழகி போட்டியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் பதிலும், யாராலும் மறக்க முடியாதது. அங்கோலா நாட்டு அழகி லெய்லா லோபஸ் என்பவரிடம், "உங்கள் உடலில் ஏதாவது ஒரு உறுப்பை மாற்ற விரும்பினால், நீங்கள் எதை மாற்றுவீர்கள்? அது ஏன்? என்று கேள்வி கேட்டார்கள்.. அதற்கு லெய்லா லோபஸ் கொஞ்சம்கூட யோசிக்காமல், டக்கென பதில் சொன்னார்..

திகைச்சிட்டாங்க

திகைச்சிட்டாங்க

"கடவுள், என்னை திறம்பட வடிவமைத்திருக்கிறார் என்றே நம்புகிறேன்... அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.. அதனால் நான் எந்த ஒன்றையும் மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டேன்.. காரணம், என்னை நானே, உடல் அழகைவிட உள்மன அழகுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன்... நான் என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சிறந்த பண்புகளையே பெற்றிருக்கிறேன்... இதையே வாழ்நாள் முழுவதும் பின்பற்ற ஆசைப்படுகிறேன்.. மற்றவர்களை மதிக்கும் பண்பே எல்லாவற்றிலும் சிறந்தது, அதையே எல்லாருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் இந்த பதிலால் திகைத்து போனார்கள்.. இதில் பதில்தான், அவரை அந்த ஆண்டில் அழகிப் பட்டம் பெற வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Super Answer by miss USA Rbonney gabriel crowned miss universe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X