Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்றிலேயே முதல்முறை அதிசயம்.. 6 அடி வித்தியாசம்? திடீர்னு தோன்றிய சர்ப்ரைஸ் ஜோடி.. வியந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி கொண்டிருக்கிறது.. அதை காணும் இணையவாசிகள் ஆச்சரியத்தில் மூழ்கிவருகிறார்கள்.. என்ன காரணம்?

உலகில் பல அதிசயத்தக்க விஷயங்களும், ஆச்சரியத்தக்க சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஒவ்வொரு அதிசய நிகழ்வுகளும், உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், குள்ளமான நபர், உயரமான நபர்களை பற்றிய செய்திகளும் அடிக்கடி இணையத்தில் வலம்வந்து கொண்டேயிருக்கும்..

Surprise Meeting and worlds tallest man sultan and shortest woman jyoti reunite again in US

சுலைமான்: தற்சமயம், உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த சுலைமான் அப்துல் சமத் என்ற 29 வயது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்...

ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. அதாவது இவரது ஊரில் இருக்கும் மருத்துவமனைகளில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் எதுவுமே இல்லையாம்.

டிசம்பர் மாதம்: கடந்த டிசம்பர் மாதம், வடக்கு கானாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருக்கிறார் சுலைமான். அப்போது, இவரது உயரத்தை அளவெடுக்க அங்கு ஒரு நர்ஸ் வந்தாராம்.. அந்த நர்ஸ் சுலைமானை பார்த்துமே, "நீ அளவு எடுக்க பயன்படுத்தும் கம்பத்தை விட உயரமாக வளர்ந்து விட்டாயே சுலைமான்," என்று அதிர்ச்சியுடன் அந்த நர்ஸ் சொன்னாராம்.

அப்போதுதான், உயரம் 9 அடி 6 அங்குலம் (2.89 மீட்டர்) இருந்ததாக கண்டறியப்பட்டது. இதன் மூலம்தான் உலகிலேயே உயரமான மனிதராக இவர் அறியப்பட்டார்.

ஆச்சரியம்: இந்நிலையில், இன்னொரு ஆச்சரிய சம்பவம் தற்போது நடந்துள்ளது.. உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதேபோல, உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுபவர் ஜோதி ஆம்கே.. இவங்க 2 பேரும் ஒருத்தருக்காருத்தர் நேருக்கு நேராக சந்தித்து கொண்டார்களாம். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இப்படி ஒரு ஆச்சரிய சந்திப்பு நடந்துள்ளது.

இது இவர்களுக்கு முதல் சந்திப்பு கிடையாது. 6 வருடங்களுக்கு முன்பேயே எகிப்தில், ஒரு போட்டோ ஷூட்டில் இவர்கள் சந்தித்து கொண்டார்கள்.. அப்போதே 2 பேரும் எகிப்து பிரமிடுகள் முன்பு நின்று கொண்டு போட்டோவுக்கும் போஸ் தந்தார்கள்.. அந்த போட்டோக்கள் இன்றும்கூட இணையத்தில் பலரால் ஈர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் இவர்கள் 2 பேரும் சந்தித்து கொண்டதை மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருவரும் பதிவிட்டுள்ளனர்...

மறுபடியும் அளவு: இந்த 2 பேருக்குமிடையே, ஆறடிக்கும் அதிகமான உயர வித்தியாசம் இருக்கிறதாம்.. கடந்த 2009-ல், கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார்... அதே வருடம்தான், ஆம்கேக்கு உலகின் "உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது ஆம்கே வயது வெறும் 15தான்.. அவரது உயரமோ, 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது.

இதற்கு பிறகு ஆம்கேக்கு 18 வயதாகும்போது, மறுபடியும் அவரது உயரம் அளவிடப்பட்டது. அப்போது, உயரம் 2 அடி 0.7 அங்குலம் இருந்ததாம். அதன்பிறகுதான், ஆம்கே உலகின் உயரம் குறைந்த பெண் என்ற சாதனையை படைத்தார்.

என்ன காரணம்: இவர்கள் 2 பேருமே கின்னஸ் சாதனையாளர்கள் என்றாலும், இருவருக்குள்ளும் ஒரு சோகம் ஒளிந்திருக்கிறது.. ஆம்கேவுக்கு உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறதாம்.. "அகோன்ட்ரோபிளாசியா" என்ற குறைபாடு இருப்பதால்தான், ஆம்கேவால், அதற்கு மேல் வளர வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்..

அதேபோல, கோசனுக்கு 'பிட்யூட்டரி சுரப்பி' காரணமாக ஜிகாண்டிஸம் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாம். அதனால்தான், அவ்ளோ உயரமாக வளர்ந்துவிட்டாராம்.

மகிழ்ச்சி: ஆளுக்கு ஒரு பக்கம் உடலில் குறைபாடுகளை கொண்டிருந்தாலும், அந்த குறைபாடுகளையே வெற்றியாக மாற்றி, இருவருமே உலக சாதனை படைத்திருப்பதுடன், சினேகத்தையும் விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பது உலக மக்களை திகைப்பில் ஆழ்த்தி வருகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+