கிரிப்டோ பற்றி அவ்வளவு பேசிவிட்டு.. பிட்காயின்களை சத்தமின்றி விற்ற எலான் மஸ்க்.. என்ன நடந்தது?
நியூயார்க்: பிட்காயின் மீதான 75 சதவிகித பங்குகளை உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக டெஸ்லா சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பிட்காயினில் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில் 936 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பங்கை விற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும்.

பிட்காயின்
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் பிட்காயினை வணிகத்திற்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதனால் ஏற்கெனவே அதிகரித்திருந்த பிட்காயின் மதிப்பு மேலும் உயரத் தொடங்கியது.

இரண்டாம் காலாண்டு
இதனைத்தொடர்ந்து தற்போது அந்நிறுவனம் இரண்டாம் காலாண்டின் நிதி தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. அதில் மேற்குறிப்பிட்டவாறு பிட்காயின் மீதான பங்குகளில் சுமார் 75 சதவிகிதத்தை விற்றுவிட்டதாக டெஸ்லா அறிவித்துள்ளது. அதேபோல கடந்த காலாண்டில் இதன் டிஜிட்டல் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் நடப்பு காலாண்டில் அது 218 மில்லியன் அமெரிக்கா டாலராக குறைந்துள்ளது என்பதை டெஸ்லா அறிக்கையில் தெளிவுப்படுத்தியுள்ளது.

விற்பனை
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட தொழில் முடக்கம், விற்பனை சந்தையில் மந்தம் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை எதிர்கொள்ளவே இவ்வாறு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக டெஸ்லா விளக்கமளித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டு வாங்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பிட்காயினில் சுமார் 10 சதவிகிதத்தை அப்போதே விற்றுவிட்டதாக நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் இப்போது பிட்காயினின் மதிப்பு ஓரளவு குறையத் தொடங்கிய காலத்தில் இந்த 75 சதவிகித விற்பனை நடைபெற்றுள்ளது.

ஏன்?
முன்னதாக கடந்த நவம்பரில் பிட்காயின் விலையானது முன்னெப்போதும் இல்லாத அளவான 69,000 அமெரிக்க டாலர் என அதிகரித்தது. ஆனால் தற்போது இதன் மதிப்பு 19-22 ஆயிரம் அமெரிக்க டாலர் என்கிற அளவில்தான் உள்ளது. அதேபோல தாங்கள் எந்த டோஜ்காயின்களையும் விற்கவில்லை என்று டெஸ்லா தெளிவுபடுத்தியுள்ளது. டோஜ்காயின் என்பது ஒரு வகையான கிரிப்டோ கரன்சியாகும். பிட்காயின்களுக்கே எப்போதும் அதிக மதிப்பு இருப்பதால் இந்த டோஜ்காயின்கள் குறித்து பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications