Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானில் அணுஆயுதத்தில் லீக்கானதா கதிர் வீச்சு? சர்வதேச அணுசக்தி நிறுவனம் விளக்கம்.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஏவுகணைகளை தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டது. இதற்கிடையே தான் பாகிஸ்தானின் கிராணா மலையில் உள்ள அணுஆயுத சேமிப்பு கிடங்கில் இருந்து அணுகதிர் வீச்சு வெளியாவதாக தகவல்கள் பரவியது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் உண்மை நிலவரம் என்ன? என்பது பற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகில் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் என்பது உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், வடகொரியா, இஸ்ரேல், பிரிட்டன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் தான் அணுஆயுதம் இருக்கிறது. வேறு நாடுகளிடம் அணுஆயுதம் கிடையாது. அணுஆயுதம் வைத்துள்ள 2 நாடுகள் இதுவரை ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது இல்லை.

the-international-atomic-energy-agency-says-no-radiation-leak-from-any-pakistani-facility-amid-of-te

ஆனால் முதல் முறையாக நம் நாடும், பாகிஸ்தானும் மாறி மாறி தாக்கி கொண்டன. இதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணுஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்ற தகவல் பரவியது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அணுஆயுத கொள்கையை பொறுத்தவரை எதிரிகள் அந்த நாட்டின் விமானப்படை தளங்களை தாக்கினால் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாடும் கூட ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தானின் 3 விமான தளங்களை தாக்கி அழித்தது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர்களும் அணுஆயுதத்தை தயாராக வைத்திருக்கிறோம் என்று பேட்டியளித்து இருந்தனர். இது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் நம் நாடு பயப்படவில்லை. துணிந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வந்தது. கடைசியில் இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டினால் வேலைக்கு ஆகாது என்று பாகிஸ்தான் மண்டியிட்டது. போரை நிறுத்தும்படி கெஞ்சியதால் நம் நாடு ஓகே சொன்னது. இதன்மூலம் போர் என்பது முடிவுக்கு வந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கிராணா மலையில் சுரங்கம் அமைத்து பாதுகாத்து வருகிறது. தற்போது அங்கிருந்து அணுக்கதிர் வீச்சு கசிகிறது என்று தகவல்கள் வெளியாகின. மேலும் இந்தியாவின் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதுமட்டுமின்றி கிராணா மலைப்பகுதியையொட்டிய கிராமங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், வீடுகள் காலியாக இருப்பது போன்றும் வீடியோ வெளியானது.

அதுமட்டுமின்றி அணுக்கதிர் வீச்சை அளவிடும் போர் விமானங்கள் வானில் பறப்பது போன்ற ஸ்கிரீன்ஷாட்டுகளும் பகிரப்பட்டதோடு, அணுக்கதிர் வீச்சை தடுக்கும் போரான் தனிமத்தை எகிப்து நாட்டின் விமானம் பாகிஸ்தானுக்கு கொண்டு வந்ததாகவும் தகவல் என்பது பரப்பப்பட்டது.
இதனை நம் நாட்டின் விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏகே பாரதி மறுத்தார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர், ‛‛பாகிஸ்தான் அணுஆயுதங்கள் உள்ள கிராணா மலைப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதா?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஏர் மார்ஷல் ஏகே பாரதி, ‛‛பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை கிராணா மலையில் சேமித்து வைத்திருப்பதை கூறியதற்கு நன்றி. அங்கு என்ன இருந்தாலும் கூட நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அந்த இடம் எங்களின் டார்கெட் பட்டியலில் இல்லை'' என்று மறுத்தார். அதேபோல் பாகிஸ்தானும் மறுத்து இருந்தது.

மேலும் இன்று காஷ்மீரில் நம் நாட்டின் ராணுவ வீரர்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து கலந்துரையாடினார். அதோடு அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, அவர் ‛‛இன்று ஸ்ரீநகர் மண்ணில் இருந்து சொல்கிறேன். மொத்த உலகத்துக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறேன். முரட்டுத்தனம் கொண்ட நாட்டில் (பாகிஸ்தான்) அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?. பாகிஸ்தானின் அணுஆயுதத்தை சர்வதேச அணு எனர்ஜி ஏஜென்சி மேற்பார்வையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் அணுஆயுத சேமிப்பு கிடங்கில் இருந்து அணுகதிர் வீச்சு கசிகிறதா? என்பது பற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA or International Atomic Energy Agency) முக்கிய விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றி சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிரெட்ரிக் டால் என்பவர் கூறியதாவது: சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தகவலின்படி பாகிஸ்தானின் அணுஆயுதம் சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து கதிர் வீச்சு எதுவும் இல்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+