மக்கள் ஓடோடி உதவுவது யாருக்கு? ஏழைக்கா? பணக்காரருக்கா? யுனிசெப் ஆய்வில் ஷாக்.. யாருமே எதிர்பார்க்கல
நியூயார்க்: ஒரே சிறுமியை பணக்கார வீட்டுப் பிள்ளையை போலவும், ஏழைக் குழந்தையை போலவும் மேக்கப் செய்து யுனிசெப் மேற்கொண்ட சோசியல் எக்ஸ்பீரிமெண்ட் (social experiment), அதிர வைக்கும் முடிவுகளை தந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் எப்படிப்பட்ட நபர்களுக்கு உதவ விரும்புகிறார்கள் என்பதை அறியவே இந்த சோசியல் எக்ஸ்ப்ரீமெண்ட் மேற்கொள்ளப்பட்டது.
நமது சமூகம் செல்வந்தர்களை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது; ஏழைகளை எவ்வாறு பார்க்கிறது என்பதை இந்த வீடியோ மிகத் தெளிவாக பிரதிபலிக்கிறது.

அறம் தவற வைக்கும் 'பொதுபுத்தி'
மனித இனம் என்னதான் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டுள்ள போதிலும், பெரும்பாலான மனிதர்களின் மனதில் சில பழமையான பொதுபுத்தி இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது என்ன பொதுபுத்தி? சட்டென புரியும்படி சொல்ல வேண்டுமானால், "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் டா" என்ற காமெடி வசனத்தை கூறலாம். அதாவது, இந்த மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.. இன்னாருக்கு இந்தக் கொடுமை நடந்தால் பரவாயவில்லை.. இவர்களுக்கு இது நடக்கக்கூடாது என்கிற எண்ணம்தான் பொதுபுத்தி. இந்த பொதுபுத்தி, பல சமயங்களில் நல்ல மனிதர்களை கூட அறத்தை விட்டு விலகச் செய்துவிடும்.

யுனிசெப் சோசியல் எக்ஸ்ப்ரிமெண்ட்
இந்நிலையில், ஐநா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) அமைப்பானது மனிதர்களின் பொது புத்தியை அல்லது பொது மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டும் பணியை சோசியல் எக்ஸ்ப்ரீமெண்ட் மூலம் கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறது. இந்த சோசியல் எக்ஸ்ப்ரீமென்ட்டின் நோக்கம், நம்மை பற்றி நாமே அறிந்துகொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சோசியல் எக்ஸ்ப்ரீமென்ட்டை யுனிசெப் மேற்கொண்டது.

ஒரே சிறுமி.. இரட்டை வேடம்..
அதன்படி, 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமிக்கு பணக்கார வீட்டுப் பிள்ளையை போல உடைகளும், மேக்அப்களும் போடப்பட்டன. பின்னர் அந்த சிறுமி மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிற்க வைக்கப்படுகிறாள். ஒரு மணிநேரம் கழித்து அதே சிறுமிக்கு ஏழைக் குழந்தையை போல மேக்கப் போடப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமி அதே பகுதியில் ஒரு மணிநேரம் நிற்க வைக்கப்படுகிறாள். பின்னர் பெரிய ரெஸ்டாரண்ட் ஒன்றிலும் இந்த எக்ஸ்ப்ரீமெண்ட் செய்யப்படுகிறது.

பணக்கார சிறுமிக்கு உதவிய மக்கள்
இந்த எக்ஸ்ப்ரீமெண்ட் அதிர்ச்சியளிக்கும் ரிசல்ட்டை தந்திருக்கிறது. அதாவது பணக்கார மேக்கப் போட்டு நின்ற சிறுமியிடம், அங்கிருந்த மக்கள் என்ன வேண்டும்.. இங்கு ஏன் நின்று கொண்டிருக்கிறாய்.. அம்மா அப்பா எங்கே.. சாப்பிட்டாயா.. சாப்பாடு வாங்கி தரட்டுமா என நூற்றுக்கணக்கான பரிவான கேள்விகள் அன்பாக கேட்கப்பட்டன. அந்த சிறுமி சாப்பாடு எதுவும் வேண்டாம் எனக் கூறிய போதிலும், பலர் அந்த சிறுமியிடம் பணத்தை கொடுத்து சென்றார்கள்.

கண்டுகொள்ளப்படாத ஏழை சிறுமி
ஆனால், ஏழைப் பிள்ளை போல மேக்கப் போட்ட அதே சிறுமியை அங்கு நிற்க வைத்த போது, ஒருவர் கூட அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. மேலும், அந்த சிறுமியே உதவி கேட்பது போல அருகே போய் நின்றாலும், மக்கள் அவளை பார்ப்பதை தவிர்த்தனர். அந்த சிறுமியிடம் இருந்து விலகிச் சென்றனர். பணமோ, சாப்பாடோ கூட வாங்கிக் கொடுத்திருக்க வேண்டாம்.. ஆனால், பரிவோடு பேசியிருக்கலாம் இல்லையா? அதை கூட யாரும் செய்ய முன்வரவில்லை. இதே ரிசல்ட்தான் ரெஸ்டாரண்ட்டிலும் யுனிசெப் குழுவினருக்கு கிடைத்தது. 'பணக்கார மேக்கப்' சிறுமியை பலர் அருகே அழைத்து பேசுவதும், சாக்லேட், ஜூஸ்களை கொடுக்கவும் முன்வருகின்றனர். ஆனால், 'ஏழை மேக்கப்' சிறுமி அங்கு நின்ற போது அவளை அங்கிருந்து விரட்டுவதிலேயே மக்கள் குறியாக இருந்தனர். மேலும், அந்த சிறுமி தான் சாப்பிட்டு 2 நாள் ஆகிறது. சாப்பாடு வாங்கி தாருங்கள் எனக் கேட்ட போதிலும், யாரும் அதை காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, நம்மிடம் நிலவும் பொதுபுத்தியை நெற்றிப்பொட்டில் அடித்ததை போல காட்டி வெட்கி தலைகுனிய வைக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications