இந்தியா பற்றி கேட்டதும்.. கோபத்தின் உச்சிக்கே போன டிரம்ப்.. இதுக்கு முன் இப்படி நடந்தது இல்லை! ஷாக்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது இரண்டாம் நிலை தடைகளை விதித்துள்ளதாகவும், இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் கோபமாக பதில் அளித்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
போலந்து அதிபர் கரோல் நவரோக்கி உடனான இருதரப்பு சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து ஒரு போலந்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் சற்றே எரிச்சலுடன் பதிலளித்தார்.

கோபப்பட்ட டிரம்ப்
"எந்த நடவடிக்கையும் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? சீனாவுக்கு வெளியே ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாங்குபவரான இந்தியா மீது இரண்டாம் நிலை தடைகளை விதிப்பது நடவடிக்கை இல்லை என்பீர்களா? இது ரஷ்யாவிற்கு பல பில்லியன் டாலர்கள் செலவை ஏற்படுத்தியது. இதை நடவடிக்கை இல்லை என்பீர்களா? நான் இன்னும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஆனால் நடவடிக்கை இல்லை என்று நீங்கள் சொன்னால், நீங்கள் வேறு வேலை தேட வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று அந்த போலந்து செய்தியாளரிடம் டிரம்ப் கூறினார். மேலும், இரண்டு வாரங்களுக்கு முன்பு "இந்தியா எண்ணெய் வாங்கினால், இந்தியாவுக்குப் பெரிய பிரச்சனைகள்" என்று தான் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோபத்தின் உச்சிக்கே போன டிரம்ப்
ஆனால் இந்தியா மீது நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள். ரஷ்யா மீது நடவடிக்கை எடுத்து உள்ளீர்களா? என்று கேட்டதற்கு கோபத்தின் உச்சிக்கே போன டிரம்ப் அதற்கு பதில் அளிக்க மறுத்த டிரம்ப், வேறு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கினார்.
புதின், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது பற்றியும், மாஸ்கோ மீது இரண்டாம் நிலை தடைகளை விதிக்க கருதுகிறாரா என்றும் கேட்டபோது, டிரம்ப், "நான் ஏற்கனவே இந்தியாவைப் பொறுத்தவரை அதைச் செய்துவிட்டேன், மேலும் மற்ற விஷயங்களிலும் அதைச் செய்து வருகிறோம்" என்று பதிலளித்தார்.
ஆகஸ்ட் 27 முதல் இந்தியா மீது டிரம்ப் 25% பரஸ்பர வரிகளையும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக இந்தியா மீது கூடுதலாக 25% வரிகளையும் விதித்துள்ளார். இதனால் இந்தியா மீதான மொத்த வரிகள் 50% ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
மோடி மறுப்பு
அதேசமயம் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறுதொழில்களின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "எங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் நாங்கள் அதைத் தாங்கிக்கொள்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள வரிகள் "நியாயமற்றவை மற்றும் பொருந்தாதவை" என்று இந்தியா விமர்சித்துள்ளது. ஒரு பெரிய பொருளாதாரம் என்ற முறையில், தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications