உலகப்போரை விட மோசம்.. உக்ரைனை "பொருளாதார காலனியாக" மாற்றும் அமெரிக்கா.. டிரம்ப் கொடூர பிளான்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்த பேச்சுவார்த்தை உக்ரைனை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. உக்ரைன் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. ஆம் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான சந்திப்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் முடிவடைந்தது. ரஷ்யா - அமெரிக்க அதிகாரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பில் உக்ரைன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

donald trump vladimir putin ukraine russia war

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது உள்ளது, என்று தெரிவித்து உள்ளனர்.

உக்ரைனுக்கு எதிராக பல விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில்.. உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம்.

உக்ரைனுக்கு வைக்கப்படும் கட்டுப்பாடுகள்

1. உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம்.

2. 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.

3. இந்த செலவிற்கு ஈடுகட்டும் விதமாக உக்ரைனுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம்.

4. அதன்படி உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து, உற்பத்தியில் இருந்து வரும் வருவாயில் முதல் பங்கு அமெரிக்காவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனிடம் தெரிவித்து உள்ளதாம்.

5. 3 வருடங்களாக செய்த உதவிகளுக்கு பதிலாக இதை வழங்க வேண்டும் என்று உக்ரைனிடம் அமெரிக்கா கண்டிப்பாக கூறி உள்ளதாம்.

6. கிட்டத்தட்ட உக்ரைனை அமெரிக்காவின் பொருளாதார காலனியாக மாற்றும் வகையில் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.

7. அமெரிக்கா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட் ஒன்றில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

8. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனிக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட மிக மோசமான கட்டுப்பாடுகள் உக்ரைன் மீது விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் இல்லாத காரணத்தால்.. ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

உக்ரைன் இல்லாமல் உக்ரைன் பற்றி நடந்த பேச்சுவார்த்தையால் அந்நாட்டு தலைவர் செலன்ஸ்கி கடுப்பாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது. ஏனென்றால் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் எதையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. முக்கியமாக நேட்டோ நாடுகள் யாரையும் டிரம்ப் ஆலோசனை செய்யவில்லை. இதனால் ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக ஆலோசனை செய்ய தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+