அமெரிக்க தேர்தல்.. பிரதிநிதிகள் சபையை கைப்பற்ற போகும் பிடன்.. செனட் சபைக்கு கடுமையான போட்டி
நியூயார்க்: அமெரிக்கா காங்கிரஸ் அவை தேர்தலில் செனட் சபையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதே சமயம் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலோடு சேர்த்து அங்கு செனட் சபைக்கும், பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி செனட் சபைக்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. செனட் சபை: ஜனநாயக கட்சி 48 இடங்களிலும், குடியரசு கட்சி 48 இடங்களிலும் வென்றுள்ளது. செனட் சபையில் பெரும்பான்மை பெறுவதற்கு 51 இடங்கள் தேவை.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி வெற்றியை நோக்கி செல்கிறது. பிரதிநிதிகள் சபை: ஜனநாயக கட்சி 212 இடங்களில் வென்றுள்ளது, குடியரசு கட்சி 194 இடங்களில் வென்றுள்ளது. பிரதிநிதிகள் சபையில் வெற்றிபெற 218 இடங்கள் தேவை.
காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது. ஒன்று செனட் இன்னொன்று பிரதிநிதிகள் சபை. இங்கு மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல் பிரதிநிதிகள் சபையில் 435 பிரதிநிதிகள் உள்ளனர்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 செனட்டர்கள் வீதம் 100 பேர் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிதிகள் உள்ளனர். காங்கிரஸ் அவையில் பிரதிநிதிகளை 2 வருடங்களுக்கு ஒருமுறையும், செனடர்களை 6 வருடங்களுக்கு ஒருமுறையும் தேர்வு செய்வார்கள்.
காங்கிரஸ் அவையில் எந்த கட்சி எவ்வளவு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே இனி வரும் நாட்களில் சட்டங்களை இயற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications