அமெரிக்காவில் மீண்டும் கொரோனா உக்கிரதாண்டவம்- ஒரே நாளில் 1,13,946 பேருக்கு பாதிப்பு;2,084 பேர் மரணம்
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,084 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 4,75,019 ஆக இருந்தது. மேலும் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.622. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மீண்டவர்கள் எண்ணிக்கை 4,93,475.
இதனையடுத்து உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,40,16,981 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 47,87,337. உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 21,08,33,041.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,13,946 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 2,084 பேர் அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,159. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,186,936. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 713,833. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33,613,117.
அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நேற்று மட்டும் 36,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் நேற்று கொரோனாவால் 150 பேர் மரணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருக்கிறது துருக்கி. துருக்கியில் நேற்று 29,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. துருக்கியில் நேற்று மட்டும் 227 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நேற்று 23,139 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நேற்று 309 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ரஷ்யாவில் நேற்று 22,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 857 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். ரஷ்யாவைப் போல மெக்சிகோவிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. மெக்சிகோவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 700; பிரேசிலில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 643 ஆக பதிவாகி உள்ளது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications