சின்ன பையன் என நினைத்து சீண்டிய அமெரிக்கா.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை குறைத்து மதிப்பிட்டுவிட்டார், இந்தியாவை சீண்டலாம், இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து அந்த நாட்டிற்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார், அது நடக்கவில்லை என்று அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்செஸ் விமர்சித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்கா இந்தியாவை ஒரு 'பள்ளிக் குழந்தையாக' நடத்தக் கூடாது. இந்தியா பெரிய பையன், பள்ளிக் குழந்தை அல்ல. டிரம்ப் இந்தியாவை சிறிய நாடு, அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்துவிட்டார். அவர் தவறாக நினைத்துவிட்டார். அவர் நினைத்தது நடக்கவில்லை. அமெரிக்கா இந்தியாவை அணுகும் விதம் தவறானது.

இந்தியா அமெரிக்கா மோதல்
இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்கும் என்று நினைக்கிறதோ அவர்களிடம் எண்ணெய் வாங்கும். எண்ணெய் சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியா தனது சுயாட்சியை உறுதிப்படுத்தி உள்ளது. அதை மாற்ற முடியாது. இந்தியாவை அவமதிக்கலாம் என்று டிரம்ப் நினைத்தார். அதற்கு அனுமதிக்க முடியாது. இந்தியா போன்ற ஒரு நாட்டை அதன் வரலாறு, வளங்கள் மற்றும் திறன்களுடன் கவனமாக நடத்த வேண்டும். சின்ன பையன் போல நடத்த கூடாது.
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக இந்தியாவை மட்டும் டிரம்ப் விமர்சிப்பது, ஆனால் இதேபோன்ற பரிவர்த்தனைகளுக்காக சீனா மற்றும் ஐரோப்பாவைத் தடை செய்யாதது தவறான நடவடிக்கை. டிரம்ப் யாரை, ஏன், எப்போது அவர் தடை செய்கிறார் என்பதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. அது நல்லதல்ல. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் ஒருவித ஸ்திரத்தன்மையும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும். ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் வாடிக்கையாளரான சீனாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை அவர் எடுக்க தவறிவிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவை குறைத்து மதிப்பிட்டுவிட்டார், இந்தியாவை சீண்டலாம், இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து அந்த நாட்டிற்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார், அது நடக்கவில்லை என்று அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்செஸ் விமர்சித்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை நிறுத்தம்
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது, என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த நிலையில்தான் இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவைத் தொடர்ந்து விமர்சிப்பதைத் "அரசியல் நாடகம், பொருளாதார யதார்த்தம் அல்ல" என்று கூறியுள்ளார்.
ரஷ்யா - இந்தியா எண்ணெய் வியாபாரம்
அதில், ரஷ்ய எண்ணெயை இந்தியா அதிக விலைக்கு வாங்குகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் ரஷ்யா மூலம் இந்தியா பெரிதாக பலன் அடையவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் உண்மையான சேமிப்பு ஆண்டுக்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே, 25 பில்லியன் டாலர் அல்ல என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவை சீண்டும் விதமாக டிரம்ப் தீவிரமாக செயல்படுத்துகிறார். ரஷ்யா எண்ணெய் மூலம் நாம் பெரிதாக பலன் அடையவில்லை. ஆனால் டிரம்ப் இதை இந்தியாவைத் தண்டிக்கும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். ரஷ்யன் கச்சா எண்ணெயின் கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் கலப்புச் செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்தியாவிற்கு ஒரு பீப்பாய்க்கு வெறும் $3-4 தள்ளுபடி மட்டுமே கிடைக்கிறது.
டிரம்ப் இதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த விரும்பினால், அவர் எந்த புள்ளிவிவரத்தையும் எடுக்கலாம். உண்மை என்னவென்றால், இந்தியா ரஷ்ய எண்ணெயை உலகளாவிய விலைக் கட்டுப்பாடு கட்டமைப்புக்குள் வாங்குகிறது. எந்த சர்வதேச ஒப்பந்தமும் மீறப்படவில்லை.
இதனால்தான், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியவில்லை, அமெரிக்காவின் வரி அழுத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது, பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறிவிட்டது என்று இந்திய நிதித்துறை முன்னாள் செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications