இந்தியாவின் எல்லையில்.. சுற்றி உள்ள 4 நாடுகளுக்கும்.. டிரம்ப் வைக்கும் பயங்கர ஆப்பு.. அப்படி போடு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முக்கியமான பல நாடுகளுக்கு டிராவல் பேன்.. அதாவது பயணத் தடையை அறிமுகம் செய்ய பரிசீலித்து வருகிறது. மொத்தமாக 43 நாடுகளில் இருந்து வரும் மக்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் இந்த தடையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் கொண்டு வர உள்ள இந்த கொள்கையானது நாடுகளை 'சிவப்பு', 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' பட்டியல்களாக வகைப்படுத்தும், ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான கட்டுப்பாடுகளுடன் செயல்பாட்டிற்கு வரும்.

'ரெட்' லிஸ்ட்
மொத்த விசா தடையை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும் இவை.ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இது அவர்களின் குடிமக்களுக்கு விசா வழங்குவதை முழுமையாக நிறுத்துவதற்கு வழிவகுக்கும். கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகியவை இந்த லிஸ்டில் அடங்கும்.
'ஆரஞ்சு' லிஸ்ட்
ரெட் அளவிற்கு இல்லாமல் சில நாடுகளை சேர்ந்த முக்கியமான பல நபர்களுக்கு, விசாவை தடை விதிக்கும் விதி ஆகும் இது. மியான்மர் மற்றும் பாகிஸ்தான் இந்த வகையின் கீழ் வருகின்றன. இது குறிப்பிட்ட பயணிகள் அமெரிக்கா வருவதை தடுக்கும். பெலாரஸ், எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ் மற்றும் ரஷ்யா, சியரா லியோன், தெற்கு சூடான், துர்க்மெனிஸ்தான் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள மற்ற நாடுகள். இந்த நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக நேரில் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
'மஞ்சள்' லிஸ்ட்
இதில் தீவிரமான சிலருக்கு மட்டும் விசா தடை விதிக்கப்படும். அதே சமயம் மற்றவர்களுக்கு விசா வழங்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். கடும் ஆய்விற்கு பின்பே இவர்களுக்கு விசா வழங்கப்படும். அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பெனின், புர்கினா பாசோ, கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, சாட், காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா, ஈக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மாலி, மவுரித்தேனியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் டோமி, ஸ்யாரியோ, ஸ்டெரியோ, ஸ்டெரியோ, ஸ்டெரியோ, காங்கோ குடியரசு, வனுவாட்டு மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை இந்த லிஸ்டில் அடங்கும்.
இந்தியர்களுக்கு கட்டுப்பாடு இல்லை
அங்கே செல்ல இந்தியர்களுக்கு இது போன்ற கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக கடும் அச்சத்தில் இருப்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர். சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் மற்றும் யூகோவ் மூலம் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய-அமெரிக்கன் சர்வே இந்திய-அமெரிக்க அரசியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த சர்வே ஆய்வு முடிவில் இந்தியர்கள் அச்சத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசிக்கும் நிலையில், சர்வே முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பிடனின் அமெரிக்க-இந்தியா உறவுகளை இந்திய அமெரிக்கர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? டொனால்ட் டிரம்ப் வந்த பின் இது எப்படி மாறி உள்ளது? 2024 தேர்தலுக்குப் பிந்தைய இந்திய - அமெரிக்க உறவை எப்படி மதிப்பிடுகிறார்கள்? டிரம்ப் உங்களை வெளியேற்றுவார் என்று நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது.
1,206 இந்திய-அமெரிக்கர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பலரும் எங்கள் எதிர்காலம் சூனியம் ஆகிவிட்டது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. டிரம்ப் காரணமாக அச்சத்தில் உள்ளோம் என்று கூறி உள்ளனர். பெரும்பாலானோர் அச்சத்தில் உள்ளதாக கூறி உள்ளனர். கிரீன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டும் இதை வரவேற்கும் வகையில் பேசி உள்ளனர்.












Click it and Unblock the Notifications