உலக சுகாதார மையத்தில் இருந்து.. வெளியேறிய அமெரிக்கா.. டிரம்ப் எடுத்த ஷாக் முடிவு.. என்ன காரணம்?
நியூயார்க்: உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
கொரோனா காலத்தில் தவறாக நடந்து கொண்டது, கொரோனாவின் சோர்ஸை விசாரிக்காதது, சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தார். கிட்டத்தட்ட 200 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் ஒரு பகுதியாக உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. ஒரு பக்கம் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே.. இன்னொரு பக்கம் இதற்கான ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.

அதோடு உலக சுகாதார மையத்திற்கு இனிமேல் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா வருடா வருடம் 111 மில்லியன் டாலர் அளிக்கிறது. சில சமயங்களில் தாமாக முன் வந்து 400 மில்லியன் டாலர் வரை கூட அமெரிக்கா அளிக்கும். உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்கா உள்ளது.
ஆனால் பிடன் ஆட்சிக்கு முன் நடைபெற்ற டிரம்ப் ஆட்சியில் உலக சுகாதார மையம் மீதான நிதியை டிரம்ப் நீக்கினார் உலக சுகாதார மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது. இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.
ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது. உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள்.
சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, என்று அமெரிக்க அதிபராக முன்பு டிரம்ப் இருந்த போது தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.
இதையடுத்து உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications