அடுத்து இந்த நாடுதான்.. குண்டு வீசி தாக்க போகிறோம்.. உறுதியாக அறிவித்த டிரம்ப்.. எல்லாம் போச்சு
நியூயார்க்: போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான சண்டையில் அமெரிக்கா இனி நேரடியாக குண்டு வீசி தாக்கத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மெக்சிகோ மீது தாக்குதல் நடத்த போவதாக அவர் கூறி உள்ளார்.
மெக்சிகோவை இக்கும்பல்கள் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பேர் போதைப்பொருளால் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

இதுவரை போதை பொருள் கடத்தல் கும்பல்கள் நேரடியாக ஆபரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளன. பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டு உள்ளன. தீவிரவாத அமைப்புகள் போல குண்டு வீசி எல்லாம் தாக்கப்படவில்லை. ஆனால் இனி மெக்சிகோவில் உள்ள போதை பொருள் அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக கருதப்பட்டு குண்டுவீசி தாக்கப்படும் என்று டிரம்ப் கூறி உள்ளார்.
டிரம்ப்பின் இந்த கருத்துப்படி பார்த்தால் டிரம்ப் மெக்சிகோ மீது நேரடியாக குண்டு வீசி இனி தாக்குதல்களை நடத்துவார். மெக்சிகோவிற்குள் ராணுவ நடவடிக்கை போரை தூண்டும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதேபோல் போதை பொருள் விற்பனை காரணமாக.. கொலம்பியா மீது அமெரிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். இந்த அறிவிப்பால் லத்தீன் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெனிசுவேலாவில் நடந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொலம்பியா குறித்து கடும் எச்சரிக்கை விடுத்தார். "கோகைன் தயாரிப்பதையும், அதை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதையும் விரும்பும் ஒரு மோசமான நபரின் மூலம் லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா நடத்தப்படுகிறது" எனக் குற்றம்சாட்டினார்.
கொலம்பியா மீது அட்டாக்
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கொலம்பியாவின் தலைமையை, குறிப்பாக அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்தார். "கொலம்பியாவும் மிகவும் பாழ்பட்டிருக்கிறது. கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு தீயவரால் அது நடத்தப்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது" என்றார்.
கொலம்பியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், "அது எனக்கு நல்லதாகவே தோன்றுகிறது.. அதனால் அதை செய்யலாம்" என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
வெனிசுலா அட்டாக்
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடந்த இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர். இது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில் அதிகாரிகளை "குட் நைட், ஹேப்பி நியூ இயர்" என மதுரோ சிரித்த முகத்துடன் வாழ்த்தினார். தான் அமெரிக்க சிறையில் இருக்க போகிறோம் என்று அஞ்சாமல் அவர் துணிச்சலாக சொன்ன இந்த விஷயம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மதுரோவை கைது செய்ய, அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது காரகாஸ் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகேயின் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கார்டெல் ஆஃப் தி சன்ஸ்" எனப்படும் போதை கடத்தல் கும்பலின் தலைமையுடன் அவர் தொடர்புடையவர் என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, அவரது கைது உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை 15 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்திருந்தது.
சரமாரி அட்டாக்
சனி அதிகாலையில் துரிதமாக நடந்த தாக்குதலில் மதுரோவும் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் பெட்ரூமில் ராணுவம் புகுந்து கைது செய்தது. காரகாஸ்வாசிகள், இந்த தாக்குதலின்போது வெடிச்சத்தங்களைக் கேட்டனர்; குறைந்தது ஏழு குண்டுகள் வெடித்து, ராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மதுரோ இல்லாத நிலையில் தற்காலிக ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் அங்கே ஆட்சி நடத்தி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், அமெரிக்க தாக்குதலால் பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டாலும், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications