அமெரிக்க அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி வைத்த ட்விஸ்ட்.. நெருக்கமாகும் டிரம்ப்! முழு ஆதரவாம்
நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிரம்ப் வேட்பாளராக களமிறங்கினால் ஆதரவு கொடுக்க தயார் என குடியரசு கட்சியின் பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. பாலியல் புகார், தேர்தல் மோசடி, தேர்தல் முடிவுகள் வெளியானபோது வன்முறையை தூண்டியது என பல வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராவது, பின்னர் சிறைக்கு செல்வது, அங்கிருந்து ஜாமீன் பெறுவது என டிரம்ப் தொடர்ந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால் அதே சமயம் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபராக வேண்டும் எனவும் காய்களை நகர்த்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லையெனில் அடுத்த இடங்களில் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி வேட்பாளராக அறிவிக்கப்படலாம். எனவே இவரும் இதற்காக தீவிரமாக முயன்று வருகிறார்கள். சமீபத்தில் அவர் கட்சி கூட்டத்தில் பேசுகையில், "நான் அதிபரானால் எலான் மஸ்கை எனது ஆலோசராக வைத்துக்கொள்வேன்" என்று கூறியிருந்தார். இது சர்வதேச அளவில் பேசு பொருளான நிலையில் மற்றொரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது, "நான் அதிபரானால் டிரம்புக்கு பொது மன்னிப்பு வழங்குவேன். ஒருவேளை டிரம்ப் அதிபர் வேட்பாளராக களமிறங்கினால் அவருக்கு முழு ஆதரவையும் அளிக்க தயார்" என்று கூறியுள்ளார். இந்த பேச்சும் அமெரிக்கா முழுக்க விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications