Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவேக் ராமசாமியை "துரத்திவிட்ட" எலான் மஸ்க்.. உள்ளுக்குள் நடந்த மோதல்.. டிரம்பிற்கு ஆரம்பமே தலைவலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அரசாங்கத் திறன் துரையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகுவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலான் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவர் என்று அறிவித்தார். இந்த பொறுப்பில் இருந்து மஸ்க் தற்போது விலகி உள்ளார்.

அவருக்கும் DOGE குழுவில் இருப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு DOGE குழுவில் ஏற்கனவே மஸ்க் தலைவராக உள்ளதாக கருத்து வேறுபாடு கண்டிப்பாக ஏற்படும். இதோடு ஒஹையோ கவர்னராக போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த தேர்தலில் நிற்க உள்ளார். இதையடுத்தே DOGE குழு தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

elon musk us presidential election 2024 kamala harris donald trump 2024


உண்மையான காரணம்:

விவேக் ராமசாமி ஒஹையோ கவர்னராக போட்டியிட உள்ளது ஒரு காரணம் என்றால்.. அவரை வெளியேற்ற எலான் மஸ்க் செய்த அரசியலே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் விவேக் ராமசாமி அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு குறித்து போஸ்ட் செய்து இருந்தார். அதன்படி அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்காமல் போக காரணம்.. வெளிநாட்டினர் அவர்களை விட திறமையாக உள்ளனர், கடுமையாக உழைக்கின்றனர் என்று கூறி இருந்தார். இது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் அவரை மஸ்க் விரும்பவில்லை. மேலும் வாஷிங்டன்னில் பலரும் ராமசாமி வெளியேற வேண்டும்.. அவர் மாநில அரசியலுக்கு போகட்டும்.. வாஷிங்டன் அரசியலில் அவர் தலையீடு இருக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்தே அரசாங்கத் திறன் துரையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகுவதாக அறிவித்து உள்ளார். மஸ்க் செய்த அரசியலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ராமசாமி செய்த அந்த போஸ்டுக்கு முன்பே அவரை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன துறை இது?:

எதிர்பார்த்தபடியே.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். இதன் மூலம் அரசில் உள்ள பல நிர்வாகிகளை எலான் மஸ்க் விரைவில் நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கையில் எடுத்த போது.. அதில் இருந்த பலர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மஸ்க் அரசு நிர்வாகத்திலும் பலரை நீக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக் மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார்.

அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+