பாக். ராணுவ தளபதியுடன் மகன்கள் டீல்! போரை நிறுத்தியது நான் தான்.. டிரம்ப் கூறுவது ஏன்? திடுக் தகவல்
நியூயார்க்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் என்பது முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதே நான் தான் என்று கூறி வருகிறார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் டொனால்ட் டிரம்ப் குடும்பத்தினர் மேற்கொண்ட கிரிப்டோ ஒப்பந்தம் தான் காரணம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருநாடுகள் இடையேயான போர் பதற்றம், தாக்குதல் சம்பவங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள், விமானதளங்களை தாக்கி அழித்தது. இதற்கு பாகிஸ்தானால் பதிலடி என்பது கொடுக்க முடியவில்லை.

இதனால் சோர்ந்துபோன பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி நம்மிடம் கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு போர் நிறுத்தம் செய்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான் தான் போரை நிறுத்தினேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் போர் ஏற்பட்டு இருக்கும். அணுஆயுத போராக மாறி இருக்கும். ஆனால் துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை வைத்து அமெரிக்கா தான் போரை நிறுத்தியது என்று கூறி வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 3ம் நபர்களின் தலையீடு என்பது இல்லை என்று நம் வெளியுறவுத்துறை உறுதியாக கூறியிருந்தாலும் கூட டொனால்ட் டிரம்ப் மட்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நான் தான் என்று பெருமைப்பட்டு கொள்கிறார். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா - பாகிஸ்தான் போரையே நிறுத்தியது நான் தான் என்று டொனால்ட் டிரம்ப் எதற்காக கூறி வருகிறார்? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய விஷயம் கசிந்தள்ளது.
அதாவது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ‛வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல்' (World Liberty Financial) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது கிரிப்டோ நிறுவனமாகும். இந்த நிறுனம் கடந்த 2024ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.இந்த நிறுவனத்தை நிறுவியவரின் பெயர் சக்கரி விட்காஃப். இவர் யார் என்றால் ரியல் எஸ்டேட் அதிபரும், டொனால்ட் டிரம்பின் நீண்டகால நண்பருமான ஸ்டீவ் விட்காஃப்பின் மகன் ஆவார். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக இப்போது செயல்பட்டு வரும் ஸ்டீவ் விட்காஃப்பின் மகன் தான் இந்த சக்கரி விட்காஃப். இவர் தொடங்கிய ‛வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்' நிறுவனத்தில் டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. அதாவது டொனால்ட் டிரம்பின் மகன்களான எரிக் டிரம்ப் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் டிரம்பின் மருமகன் ஜார்ட் குஷ்னிர் ஆகியோருக்கு 60 சதவீதம் பங்கு உள்ளது.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்த வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல் நிறுவனத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்தது. அதன்பிறகு பாகிஸ்தானின் கிரிப்டோ கவுன்சில் மற்றும் வேர்ல்ட் லிபர்ட்டி பைனான்சியல் நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் என்பது 3 முக்கிய நோக்கங்களை உள்ளடக்கியது. ஒன்று promote blockchain innovation. இரண்டாவது stablecoin adoption. 3வது tokenized trade infrastructure in Pakistan என்பதை நோக்கமாக கொண்டது.
இதில் பிளாக் செயின் இனோவேஷன் என்பது கிரிப்டோ கரன்சி விவகாரத்தில் 3ம் நபர் தலையீடு இல்லாமல் ஆக்குவதற்கான நடைமுறையாகும். ஸ்டேபிள் காயின் அடாப்ஷன் என்பது ஸ்டேபிள் காயின் கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்யும் முறையாகும். இந்த ஸ்டேபிள்காயின்களின் மதிப்பு என்பது ஃபியட் நாணயம் அல்லது தங்கம் போன்ற பிற சொத்தகளுடன் இணைக்கப்பட்டு நிலையான விலையில் மெயின்டெயின் செய்ய முடியும். Tokenized trade infrasturcture என்பது சொத்து உரிமம், கடன் உள்ளிட்டவற்றை பிளாக் செயின் முறையில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யும் நடைமுறையாகும். ஒரு வரியில் கூற வேண்டும் என்றால் பாகிஸ்தானின் கிரிப்டோ விதிமுறை, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தி கொடுப்பது தான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த மீட்டிங்கிற்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசீம் முனீர் தான். அதாவது அசீம் முனீர் தான் மூடப்பட்ட அறையில் ‛வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்' நிறுவனத்துடன் பேசி டீலை முடித்துள்ளார். அசீம் முனீர் ராணுவ தளபதியாக இருந்து கொண்டு பாகிஸ்தானின் டிஜிட்டல் கரன்சி விவகாரங்களில் நேரடியாக ஏன் தலையிடுகிறார்? என்று அப்போது கேள்விகள் எழுந்தன.
மேலும் ஏப்ரல் 22ம் தேதி தான் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டு கொன்று இருந்தனர். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு அறிவித்தது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது ஏற்பட்டது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் அசீம் முனீர் இந்த மீட்டிங்கில் பங்கேற்று டொனால்ட் டிரம்பின் மகன்கள், மருமகன்களுக்கு 60 சதவீதபங்கு உள்ள கம்பெனியுடன் டீலை முடித்துள்ளார்.
இதனை மனதில் வைத்து தான் டொனால்ட் டிரம்ப் இந்தியா - பாகிஸ்தானை போரை நிறுத்தியதாக பெருமையாக கூறி பாகிஸ்தானிடம் நல்ல பெயர் எடுக்க விரும்புகிறோர். மேலும் போரை நிறுத்தியது எப்படி என்பது பற்றி ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் கூறும்போது, ‛‛போரை தொடர்ந்தால் வர்த்தகத்தை மறந்துவிட வேண்டும். போரை விட்டு விட்டு வாருங்கள். வர்த்தகம் செய்வோம் என்று கூறினேன். இதனை ஏற்று இருநாடுகளின் தலைவர்களும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டனர்'' என்று கூறியிருந்தார். இதனை வைத்து பார்க்கும்போதும் உங்களுக்கு மேற்கூறிய விஷயம் நன்கு புரியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications