1 மாதம்தான் இருக்கு.. அவசர அவசரமாக சிசேரியன் டெலிவரி செய்யும் அமெரிக்க பெண்கள்.. காரணம் டிரம்ப்
நியூயார்க்: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் பெற்றோர்கள்.. முக்கியமாக இந்தியர்கள் பலருக்கும் அதிபர் டிரம்ப் பெரிய செக் ஒன்றை வைத்து உள்ளார். டிரம்ப் விதித்த உத்தரவு ஒன்றின் காரணமாக அங்கே சிசேரியன் செய்வது திடீரென அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் குடியுரிமை நீக்கப்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் கிடையாது. அதாவது பெற்றோர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ நிரந்தர இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும்.

இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என்று டிரம்ப் மிக முக்கியமான் முடிவை எடுத்து உள்ளார். இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
சிசேரியன் செய்ய ஓடும் பெண்கள்:
டிரம்ப் விதித்த இந்த உத்தரவின் காரணமாக அங்கே சிசேரியன் செய்வது திடீரென அதிகரித்துள்ளது. அதன்படி இந்த புதிய விதி 1 மாதத்தில் அமலுக்கு வரும். அதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக தற்போது கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அடுத்த 1 மாதத்திற்குள் குழந்தை பெற்றுக்கொள்ள சிசேரியன் செய்யும் முடிவில் இறங்கி உள்ளனராம். ஆனால் அமெரிக்காவில் அவ்வளவு எளிதாக அப்படி சிசேரியன் செய்ய முடியாது என்பதால் பலரும் மருத்துவ உதவிகளை நாடி வருகிறார்களாம்.
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற காத்திருக்கும் பெற்றோர்கள்.. முக்கியமாக இந்தியர்கள் பலருக்கும் இது சிக்கலாகி உள்ளது. அவர்களுக்கு கிரீன் கார்டு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்கும் . அதற்கு முன் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையும் கிரீன் கார்டு பெற இனி காத்திருக்க வேண்டும்.
உத்தரவின் பின்னணி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதாக உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள நடைமுறையை அமெரிக்கா கைவிடுவதாக அறிவித்து உள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறை படுத்தி உள்ளார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications