நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. வீடுகளில் முடுங்கியது மலை மாவட்டம்.. தீவிர கண்காணிப்பில் 142 பேர்

நீலகிரியில் தீவிர கண்காணப்பில் 142 பேர் உள்ளனர்

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரியில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.. ஆனால் 142 பேர் கண்காணிப்பில் உள்ளனர்... மேலும் மொத்த மலை மாவட்டமும் இழுத்து மூடப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Recommended Video

    லாக் டவுனை மீறினால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

    நீலகிரியை பொறுத்தவரை இது ஒரு சுற்றுலாதலம்.. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வர்.. சீசன் என்றில்லாமல் பொதுவாகவே சுற்றுலா பயணிகள் நிரம்பி வழியும் மாவட்டம் இது.. இப்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

    coronavirus: Isolated in homes 142 surveillance in nilgiris district

    மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு எல்லையில் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா உள்ளதால், அந்த மாநில மக்களும் வெகு இயல்பாகவே வந்து செல்வதால் அவர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலம், வெளிமாவட்டம், வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கடைகள், வீடுகளில் கிருமிநாசினி வைக்கப்படவேண்டும்.. 320 கிராம் பிளீச்சிங் பவுடருடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்தால், மேல் பகுதியில் நுரை கலந்த தண்ணீர் காணப்படும்.. அதை 9 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து வீடுகள், சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம்.... கிருமிநாசினி கிடைக்காத பட்சத்தில், ஆபரேஷன்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்-ஐ கிருமி நாசினியாக கூட பயன்படுத்தலாம் என்று ஏற்கனவே கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தி இருந்தார்.

    நீலகிரியை பொறுத்தவரை சர்வதேச பள்ளிகள் இங்கு நிறைய உள்ளன... அதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் படிப்பதால், பள்ளிகளை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நேரடியாகவே கண்காணித்து வருகின்றனர். கிராமங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க 40 குழுக்கள் அமைக்கப்பட்டு தூய்மை பணி கண்காணிக்கப்படுகிறது... உள்ளூர் மக்களின் நடமாட்டமும் காணப்படவில்லை.. ஆங்காங்கே ஒருசிலர் பேரின் நடமாட்டம் உள்ளது.. அவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி உள்ளனர்.

    கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமாக தீவிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமாக தீவிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    இப்போதைக்கு ஊட்டியில் எந்த சுற்றுலா பயணிகளும் இல்லை.. ஆனால் விமான நிலையங்களில் இருந்து வந்த 44 பேர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 98 பேர் என மொத்தம் 142 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.. அவர்களின் பேர், அட்ரஸ், செல்போன் நம்பர் பெறப்பட்டு உள்ளது. வைரஸ் அறிகுறிகள் இல்லை. ஆனாலும் அவர்களது வீடுகளிலேயே தொடர்ந்து 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    142 பேரின் வீடுகள் முன்பு ஸ்டிக்கரும் ஒட்டப்பட இருக்கிறது. இதைதவிர ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு தயாராகி வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளம் அட்வைஸ் தரப்பட்டு வருகிறது. இன்று மாலை முதல் 144 உத்தரவு என்பதால் கடைகளில் மட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது.. ஆனால் மெடிக்கல் ஷாக், ரே‌‌ஷன் கடைகள், பெட்ரோல் பங்க், பால், மளிகை கடை போன்றவை இயங்கும் என்பதால் மக்களிடம் பெரிய அளவுக்கு பீதி இல்லை. ஆனால் மாவட்டத்தை லாக் டவுன் செய்யலாமா என்ற ஆலோசனையும் நடந்து வருகிறது.

    என்றாலும், குளிர்பிரதேசம் என்பதாலும், கேரளா, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டம் என்பதாலும், கொரோனாவின் தீவிரமும் ஒருவித கலக்கமும், பீதியும் மொத்த நீலகிரி மாவட்டத்தையும் பீடித்துள்ளது!

    English summary
    coronavirus: Isolated in homes 142 surveillance in nilgiris district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X