ஒரு மணி நேரமாக எரியும் ஹெலிகாப்டர்.. மலையின் அடிவாரத்திலும் கிடக்கும் உடல்கள்! உள்ளூர் மக்கள் தகவல்
குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்கடனுக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான எம்ஐ-17வி5 ரக விமானம் புறப்பட்டது. அப்போது வெலிங்டனை அடைய 10 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத் துறையை சேர்ந்த 14 பேர் பயணித்ததாக தெரிகிறது.

7 பேரின் நிலை என்ன
இந்த விமானத்தில் 7 பேர் வரை பலியாகியுள்ளனர். மற்ற 7 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இந்த விமானத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவியும் பயணித்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

தீயணைப்பு அதிகாரிகள்
விமான பெட்ரோல் என்பதால் அது அதிக வீரியத்துடன் வெடித்து சிதறி கொண்டே இருக்கிறது. மேலும் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு மணி நேரமாக விமானம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அடையாளம்
சம்பவ இடத்திற்கு உள்ளூர் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர். அவர்களிடம் உள்ளூர் மக்கள் கூறுகையில் 80 சதவீதம் எரிந்த நிலையில் இரு உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். சில உடல்கள் மலையின் அடிவாரத்தில் விழுந்து கிடப்பது தெரிய வருகிறது. அந்த உடல்களை மீட்கவும் அவற்றின் அடையாளத்தை கண்டறிவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

6 பேர்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலிருந்து 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications