அலறிய ஊட்டி.. ஆக்ரோஷத்துடன் சுழட்டி சுழட்டி அடித்த சுழல் காற்று.. தெறித்து ஓடிய மக்கள்!!
திடீரென சுழன்றடித்த சுழல் காற்று வீசியதால் மக்கள் அச்சமடைந்தனர்
ஊட்டி: திடீரென சுழட்டி சுழட்டி வீசிய சுழல் காற்றை பார்த்து ஊட்டி மக்கள் தலைதெறிக்க ஓடினர்.. வானுயரத்துக்கு செம்மண் கலரில் மண் திரண்டு நின்றதை பார்த்து மிரண்டுவிட்டனர்.
Recommended Video
தற்போது வானநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.. ஒரு பக்கம் சூறாவளி வீசுகிறது.. இன்னொரு பக்கம் கொளுத்தும் வெயில் சுட்டெரிக்கிறது.. இதுபோக அடுத்து வரும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் மழை, காற்று, வெப்பம் என்று தினந்தோறும் தகவல்களும் அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.. அந்த வகையில், ஊட்டியில் திடீரென சுழல் காற்று வீச ஆரம்பித்து.
ஊட்டி அருகே வேல்கவட்டி என்ற இடத்தில் நேற்று காலை இந்த திடீர் பேய் காற்று வீசியது.. இதை பார்த்து அந்த பகுதி மக்கள் தெறித்து ஓடினர்.. மைதானம் ஒன்றில் புட்பால் விளையாடி கொண்டிருந்த பிள்ளைகள் இதை பார்த்து பயந்துவிட்டனர்.. ஒருசிலர் இதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.
அந்த மைதானம் ஏற்கனவே செம்மண் கலரில் இருக்கவும், சுழன்றடித்த காற்றால் வானளவுக்கு அது திரண்டு ரெட் கலரில் உருவாகியது. சற்று நேரத்துக்கெல்லாம் மேகத்துக்கும் தரைக்குமாக அது சுழன்றபடியே உஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் பிரமாண்டமாக உயர்ந்து நின்றது.
கிட்டத்தட்ட 10 நிமிடத்துக்கு இந்த சுழல் காற்று நீடித்ததாக தெரிகிறது. வெளிநாடுகளில் இப்படி சுழல் காற்று வீசினால் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் கார், ஜீப்புகள் கூட சில சமயம் தூக்கி எறியப்பட்டுவிடுமாம். இந்த மாதிரியான சுழல் காற்று ரொம்பவும் அரிதான நிகழ்வு என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications