உருண்டு விழுந்த பாறை.. மேட்டுபாளையம் - உதகை ரயில் சேவை ரத்து.. இன்றும், நாளையும் இயங்காது
நீலகிரி: நீலகிரியில் பெய்து வரும் கனமழை மற்றும் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் உருண்டு விழுந்த பாறை உள்ளிட்டவற்றால் இன்றும், நாளையும் மேட்டுபாளையம் - உதகமண்டலம் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் அடித்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு படையெடுத்தனர்.

குளிர்பிரதேசங்களான கொடைக்கானல், ஊட்டியில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற குளிரை அனுபவித்த கோடை வெயிலில் இருந்து தப்பினர்.
இதற்கிடையே தான் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து கொடைக்கானல், ஊட்டி சென்று வந்தனர்.
இதற்கிடையே தற்போது தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை நன்கு பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வர வேண்டாம என கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கிடையே தான் குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதையடுத்து மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மேலும் இன்று, நாளை, நாளை மறுநாள் கனமழை வாய்ப்புள்ளது. இதனால் மேட்டுபாளையம் - உதகமண்டலம் இடையேயான ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை இயங்க வேண்டிய மேட்டுபாளையம் - உதகமண்டலம் ரயில் (வண்டி எண் 06136), உதகமண்டலம் - மேட்டுபாளையம் ரயில் (06137), மேட்டுபாளையம் - உதகமண்டலம் சிறப்பு ரயில் (06171) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு டிக்கெட் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications