ஒடிசா அரசின் மில்லட் மிஷன்.. ஊட்டசத்து உணவில் புதியதோர் புரட்சி.. அசத்தும் நவீன் பட்நாயக்!
புவனேஸ்வர்: ஒடிசாவில் ‛மில்லட் மிஷன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினை விவசாயத்தை ஊக்குவித்து வரும் மாநில அரசு பெண்கள், குழந்தைகள் மத்தியில் அதன் பயன்பாட்டை அதிகரித்து ஊட்டசத்து குறைபாட்டை போக்கியுள்ளது. இதில் வெற்றி பெற்ற ஒடிசா அரசை மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள் பின்பற்ற துவங்கி உள்ளன.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் தைமுதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் தினை வகை பயிர் சாகுபடியை மேம்படுத்தவும், பெண்கள், குழந்தைகள் இடையே தினை பயன்பாட்டை அதிகரிக்க அம்மாநில அரசு விரும்பியது.
ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு கியோஞ்சர், மயூர்பஞ்ச், சுந்தர்கர், கோராபுட், கந்தமால், ராயகடா ஆகிய பழங்குடி மாவட்டங்களில் தினை பரவலாகப் பயிரிடப்பட்டது. அதன்பிறகு குறைந்தது.

தினை வகைககளின் பயன்கள்
அதாவது உலகமயமாக்கல் மற்றும் பழங்குடியின மக்களிடையே நெல் சாகுபடியை ஊக்குவித்ததன் மூலம் தினை விவசாயத்திற்கு ஊக்கம் கிடைக்கவில்லை. இதனால் தினை விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அரிசி மற்றும் கோதுமையை விட தினையில் அதிக புரதம் இருப்பதால் இது குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்கும் என்பது ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்டது. இதனால் ஒடிசாவில் தினை சாகுபடியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்யப்பட்டது.

மில்லட் மிஷன் திட்டம் அறிமுகம்
இதையடுத்து ஒடிசா அரசு சிறப்பு திட்டம் வகுக்க விரும்பியது. இதற்காக அரசு சார்பில் ‛மில்லட் மிஷன்' திட்டத்தை துவங்கியது. தினை வகைகளுக்கு குறைந்த தண்ணீர் தேவைப்படுவதால், வறட்சி மாவட்டங்கள் அல்லது மாநிலத்தின் மழைப்பற்றாக்குறை பகுதிகளில் சாகுபடி செய்யலாம் என்பதால் இத்திட்டத்தில் ஒடிசா அரசு அதிக ஆர்வம் காட்டியது. இதில் தற்போது வெற்றியும் பெற்றுள்ளது.

10 மாவட்டங்களில் திட்டம்
திட்டத்தின் முதலாமாண்டில் தினை சாகுபடிக்காக பத்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. தொகுதி மட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் அல்லது சுய உதவிக்குழுக்களின் உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு மாநில வேளாண்மைத் துறையின் ஒரு அங்கமான ATMA (வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம்) மூலம் சுய உதவிக்குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து தொழில்நுட்ப உதவியுடன் முதலாமாண்டில் மாநில அரசின் LAMPS மூலம் தினை கொள்முதல் செய்யப்பட்டது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு லட்டாக...
இவ்வாறு விளைவிக்கப்படும் தினைகள் மாநில அங்கன்வாடி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தினை லட்டுகளாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களுக்கு காலையில் சத்தான தினை உணவு கிடைக்கிறது. இதன்மூலம் ஒடிசாவில் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தினை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கியோஞ்சர், கோராபுட், கந்தமால், சுந்தர்கர் உள்ளிட்ட பிற மாவட்ட தலைமை இடங்களில் தினை கபே திறக்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் வருவாயை உயர்த்தியது மட்டுமின்றி ஓட்டலை நிர்வகிக்கும் சுய உதவிக்குழுக்களுக்கும் உதவுகிறது.

உலக வங்கி பாராட்டு
என்எப்எஸ்எம் திட்டத்தின் கீழ் தினையை பிடிஎஸ்ஸில் சேர்க்க மாநில அரசு முடிவு செய்தது. 2018-19 நிதியாண்டில் முதல் ஆண்டில் 17,986 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டது. இது 2021-22 நிதியாண்டில் 12 மடங்கு அதிகரித்து 2,03,844 குவிண்டாலாக உயர்ந்தது. மாநிலத்தில் தற்போது 15 மாவட்டங்களில் தினை சாகுபடி செய்யப்படுகிறது. ஒடிசா அரசின் இந்த மாதிரியை உலக வங்கியும் பாராட்டியுள்ளது. இதன்மூலம் தினைகளின் உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரிக்கிறது.

தினை விவசாயத்துக்கு புத்துயிர்
இதில் விவசாயி முதல் எஸ்எச்ஜி வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் வரை ஒவ்வொரு பங்குதாரர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். இது தனித்துவமான விஷயமாக உள்ளது. ஒடிசா அரசு தினை விவசாயத்திற்கு புத்துயிர் அளித்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் அதை பிரபலமாக்கியது. இதன் மூலம் தினை உற்பத்தி, பயன்பாடு அதிகரித்து குழந்தைகள், பெண்கள் ஊட்டசத்து உணவாக தினைை வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் தற்போது ஒடிசா மாதிரியை பின்பற்றி வருகின்றன. இது ஒடிசா விவசாயத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தினை விவசாயத்தில் நாட்டின் முன்னோடி மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications