Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதல்.. கணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய பெண்.. உடல் மீது ரசாயனம் ஊற்றிய போது ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலனின் உதவியுடன் தனது கணவரை கொன்ற பின்னர் உடலை துண்டாக்கி ரசாயனங்களை ஊற்றி ஆதாரங்களை அழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரசாயன வாடை அடித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நேரில் வந்து பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்தவரின் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோரை கைது செய்தனர்.

பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் ராகேஷ். இவருக்கு வயது 30. அவரது மனைவி ராதா

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ஜாலியாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் தனது கணவன் ராகேஷை கொன்றுவிட ராதா முடிவு செய்கிறார். கள்ளக்காதலன் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளான்.

கொலை செய்தனர்

கொலை செய்தனர்

இந்நிலையில் ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். கள்ளக்காதலன் சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்தனர்.

உடலை வெட்டி அழிக்க முயற்சி

உடலை வெட்டி அழிக்க முயற்சி

அதன்பின்னர் தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை தடயமே இல்லாமல் அழிப்பதற்காக உடலை பல துண்டுகளாக வெட்டினார்கள். பின்னர், சுபாஷும் ராதாவும் ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றனர். ஆனால் ரசாயனங்கள் பயன்படுத்தியால் வெடித்து தீப்பற்றியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் என்ன வெடித்து தீ வருகிறது என்று போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பார்த்து அதிர்ச்சி

பார்த்து அதிர்ச்சி

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த ஒரு சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் உடலை மொத்தமாக சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் குழு விசாரணையை தொடங்கியது. விசாரணையில், துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கிடந்த சடலம் ராதாவின் கணவர் சிக்கந்தர்பூரைச் சேர்ந்த ராகேஷ் என்பது தெரியவந்தது.

கூட்டாளியுடன் பழக்கம்

கூட்டாளியுடன் பழக்கம்

இறந்த ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட மதுவையும் சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்தார். இதனால் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தார். இதன் காரணமாக, ராகேஷ் பெரும்பாலும் அங்கும் இங்குமாக இரகசியமாக வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்தார், சிறிது காலம் கழித்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

சதி திட்டம்

சதி திட்டம்

அதன்பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொலை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது, அதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்ந்தார்கள். ராதா அண்மையில் ராகேஷை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுள்ளார். துண்டுதுண்டாக வெட்டி உடலை ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

விசாரணை

விசாரணை

ராகேஷ் கொலை தொடர்பாக அவரது சகோதரர் தினேஷ் சாஹ்னி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராதா, அவரது கள்ளக்காதலன் சுபாஷ், சகோதரி கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணாவின் கணவர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+