பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 ஆண்டுக்கு பின்னர் வாக்குப்பதிவில் பீகார் மக்கள் தரமான சம்பவம்.. கலக்கத்தில் கட்சிகள்

Google Oneindia Tamil News

பாட்னா: மோசமான கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும், பீகாரில 20 ஆண்டுகளுக்கு பின்னர் மிக உச்சபட்ச வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. இதனால் பீகாரில் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தல்களில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 57.05 சதவீதமாகும். 54.68 சதவீத ஆண் வாக்காளர்கள் வாக்களித்தாலும், பெண்கள் 59.69 சதவீத வாக்குகளை அளித்துள்ளனர்.

2000 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு இது மிக உயர்ந்த வாக்கெடுப்பு சதவீதமாகும். 2015 மாநிலத் தேர்தல்களில் வாக்கெடுப்பு சதவீதம் 56.8 ஆகவும், 2010 ல் இது 52.65 ஆகவும், அக்டோபர் 2005 இல் 45.85 சதவீதமாகவும் ஆகவும், 2005 பிப்ரவரியில் இல் 46.5 ஆகவும் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஆறு முறை நடந்த சட்டசபை தேர்தல்களை ஒப்பிட்டால் வாக்களிப்பு சதவீதம் 2000ம் ஆண்டில் மிக அதிகபட்சமாக 62.6 சதவீதம் ஆக இருந்தது.

பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்! பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்!

57.05 சதவீதம் வாக்குகள்

57.05 சதவீதம் வாக்குகள்

அதன்பிறகு முதல்முறையாக 57.05 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் இருந்தபோதிலும் கடந்த தேர்தல்களை ஒப்பிடும் போது அதிக வாக்குப்பதிவு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.

Recommended Video

    Bihar-ல் BJP-யிடமிருந்து MLA-க்களை பாதுகாக்க Congress அதிரடி வியூகம்
    வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம்

    வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம்

    பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் அதிக வாக்கெடுப்பு சதவீதத்திற்கு மூன்று காரணங்களை விளக்கினார். ஒன்று, ஜனநாயக செயல்முறைகள் மெதுவாக உருவாகி பீகாரில் மிகவும் பயனுள்ளதாகி வருகின்றன. இரண்டாவதாக, பல ஆண்டுகளாக பெண் பங்களிப்பு அதிகரித்துள்ளது, இது ஒரு ஜனநாயகத்தில் ஆரோக்கியமான அறிகுறியாகும். மூன்றாவது விஷயம் என்னவென்றால், கொரோனா பரவல் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற வேறு சில மாநிலங்களில் இருப்பதைப் போல கடுமையாக இல்லை. எனவே, பயம் இங்கு குறைவாக இருந்தது. " என்றார்.

    வரவேற்ற எம்பி

    வரவேற்ற எம்பி

    பீகார் மாநிலம் சரண் நகரைச் சேர்ந்த பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி வாக்களிப்பு சதவீதம் அதிகரிக்க நான்கு காரணங்களை பட்டியலிட்டார். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேர்தல் ஆணையம் எடுத்த சில நடவடிக்கைகளால் வாக்கெடுப்பு சதவீதம் அதிகரித்தது .ஒவ்வொரு வாக்குச்சாவடியும் பாதியாகப் பிரிக்கப்பட்டன. முன்னதாக, ஒரு சாவடியில் 700 வாக்காளர்கள் இருந்தனர். இது 350 ஆகக் குறைக்கப்பட்டது. இது மிகவும் வசதியாக இருந்தது. வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதற்கு ஒரு ஈர்ப்பாக மாறியது. வாக்களிப்பு சீட்டு ஒரு வாக்காளரின் அனைத்து விவரங்களையும் கொண்டிருந்தது போன்ற சில அறிவியல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இது புகைப்பட அடையாள அட்டையை தேவையற்றதாக மாற்றியது. கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு அவர்களின் உடல்நலக் கவலைகளை மனதில் வைத்து வாக்குச்சாவடிகள் தனியாக அமைக்கப்பட்டன. இவை எல்லாம் வாக்குப்பதிவு அதிகரிக்க காரணமாக அமைந்தது" என்று பாராட்டினார்.

    அரசியல் காரணங்கள்

    அரசியல் காரணங்கள்

    தேஜாஷ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியின் துணைத் தலைவர் சிவானந்த் திவாரியும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை பாராட்டினார். அத்துடன் அவர் வாக்களிப்பு சதவீதம் அதிகரித்ததன் பின்னணியில் அரசியல் காரணங்களையும் பட்டியலிட்டார். இதுபற்றி சிவனாந்த் திவாரி கூறுகையில், "வாக்கெடுப்பு சதவீதம் அதிகமாக இருக்கும் போதெல்லாம், வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புவார்கள். அவர்கள் வாக்களிப்பதில் தீவிர அக்கறை காட்டாத போதெல்லாம், அவர்கள் இப்போதைய அரசாங்கத்தின் தொடர்ச்சிக்காக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.எ ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸின் பொது பேரணிகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்தார்கள்" என்று அவர் கூறினார். கொரோனா பயம் குறித்து கேட்டபோது, ​​அது நகரங்களில் இருக்கிறது, ஆனால் கிராமப்புறங்களில் இல்லை. என் மகன் ராகுல் திவாரி போஜ்பூரில் உள்ள ஷாப்பூர் தொகுதியிலிருந்து ஆர்ஜேடி சார்பாக போட்டியிட்டார். கிராமங்களில் தேவையில்லை என்பதால் அவரோ வாக்காளர்களோ முககவசம் அணியவில்லை," என்றார்.

    எதிர்ப்பு அலை இல்லை

    எதிர்ப்பு அலை இல்லை

    இதனிடையே ஜே.டி.யு ராஜ்யசபா எம்.பி. மற்றும் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி சிவானந்த் திவாரியின் கருத்தில் உடன்படவில்லை. ஏனெனில் ஆளும் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி இருக்கும்போது, ​​வாக்காளர் எண்ணிக்கை 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கும். "ஆனால் பீகாரில், வாக்காளர் எண்ணிக்கை 1 சதவீதம் கூட அதிகரிக்கவில்லை, இது மிகக் குறைவு. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்காளர் உணர்வின் அடிப்படையில் இது எதையும் குறிக்கவில்லை, " என்றார்.

    English summary
    Despite the dreaded and deadly Covid-19 pandemic, Bihar clocked the highest poll percentage in 20 years in the just-concluded three-phase assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X