3 வருஷமா நான் பாடமே நடத்தல! சம்பளம் வேண்டாம்.. ரூ.24 லட்சத்தை திருப்பி கொடுத்த பீகார் பேராசிரியர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சுமார் 3 ஆண்டுகள் வரை கல்லூரி மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கவில்லை எனக்கூறி இந்தி பேராசிரியர் ஒருவர் ரூ.24 லட்சம் சம்பளத்தை பல்கலைக்கழகத்தில் திரும்ப வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் நிதிஷ்வர் கல்லூரி உள்ளது. பிஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் இந்தி உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார் (வயது 33). இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலை மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பில் பிஎச்டி முடித்தார்.

பாடம் கற்க வராத மாணவர்கள்
கடந்த 2019 செப்டம்பரில் நிதிஷ்வர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் தான் அவரிடம் இந்தி பாடம் கற்க மாணவர்கள் வருவது இல்லை என கூறப்படுகிறது. இதனால் லாலன்குமார் பணி இடமாறுதல் கேட்டார். ஆனால் அவருக்கு பணி இடமாறுதல் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

சம்பளத்தை திருப்பி வழங்கினார்
மேலும் பாடம் கற்று கொடுக்காமல் சம்பளம் பெறுவதாக அவர் நினைத்தார். இதனால் 2019ல் இருந்து தற்போது வரை அவர் பெற்ற சம்பளத்தை திரும்ப வழங்க முடிவு செய்தனர். அதன்படி அவர் தனது இரண்டு ஆண்டு மற்றும் ஒன்பது மாத சம்பளமான ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 228க்கான கசோலையை பல்கலைக்கழகத்திடம் வழங்கினார். இதனை ஏற்க பல்கலைக்கழகம் ஏற்க மறுத்த நிலையில் புகார் பற்றி விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது.

மாற்றுப்பணி கோரிக்கை
இதுகுறித்து லாலன் குமார் கூறுகையில், ‛‛பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க நான் விரும்பவில்லை. கொரோனா கால ஆன்லைன் வகுப்பில் சில மாணவர்கள் மட்டுமே கல்வி கற்க வந்தனர். தொடர்ந்து 5 ஆண்டுகள் மாணவர்களுக்கு கற்று கொடுக்காமல் இருந்தால் அது எனது கல்வி அறிவை மழுங்க செய்துவிடும். எனக்கு முதுநிலை மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் உள்ளது. இதனால் மாற்றுப்பணி கேட்டேன். வழங்காததால் சம்பளத்தை திரும்ப கொடுத்துள்ளேன். எனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்குவேன்'' என்றார்.

கல்லூரி முதல்வர் சொல்வது என்ன?
இதுபற்றி கல்லூரி முதல்வர் மனோஜ் குமார் கூறுகையில், ‛‛அவரிடம் கல்வி கற்க மாணவர்கள் செல்லவில்லை என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை. 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நேரடி வகுப்புகள் பாதிக்கப்பட்டன. பணி இடமாற்றம் வேண்டுமானால் அவர் என்னிடமே நேரிடையாக கேட்டு இருக்கலாம்'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications