பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்போ சன்னி லியோன்.. இப்போ தல தோனி.. பீகாரில் தொடரும் அவலம்.. ஹால் டிக்கெட்டில் குளறுபடி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தோனி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் இது பல்கலைக்கழகத்தின் மாண்புகளை குறைக்கும் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

தற்போது இந்த ஹால் டிக்கெட்டுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த 4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த

 ஹால் டிக்கெட்டில் தோனி

ஹால் டிக்கெட்டில் தோனி

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்காக தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்

அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்

ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக, கிரிக்கெட் வீரர் தோனி, பிரதமர் நரேந்திர மோடி, பீகார் ஆளுநர் பாகு சவுஹான் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஹால்டிக்கெட்டுகளை சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் பரப்பியுள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் இந்த படங்கள் பேசுபோருளாகியுள்ளன. இந்த சம்பவம் பல்கலைக்கழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் கூறியுள்ளதாவது,

 விசாரணை

விசாரணை

"சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிவந்துள்ள இந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை கொண்டுதான் பொதுவாக ஹால்டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்ய முடியும். அதேபோல் ஹால்டிக்கெட்டுகளை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விநியோகிக்கும் முன் மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் இதர தகவல்கள் கேட்டுப்பெறப்படும். இந்நிலையில் சில குறும்புக்கார மாணவர்கள் இவ்வாறு புகைப்படங்களை மாற்றி பதிவேற்றம் செய்துள்ளனர்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

இதனால்தான் ஹால் டிக்கெட்டுகளில் இவ்வாறு மாணவர்களின் புகைப்படங்களுக்கு பதில் வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. இது முக்கிய பிரச்னை. இதன் மீது முழு கவனமும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மாணவர்களுக்கு ஷோ காஸ் (show cause) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படலாம்" என்று பதிவாளர் கூறியுள்ளார். இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பல்கலைக்கழக மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளில் பாலிவுட் நடிகர்கள் இம்ரான் ஹாஷ்மி மற்றும் சன்னி லியோன் ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The pictures of Prime Minister Narendra Modi and Dhoni on the hall tickets issued to the students of a university in the state of Bihar has caused a lot of controversy. The university registrar said that an inquiry has been ordered into the incident. He also said that this is an action to lower the dignity of the university. Now these hall tickets are spreading fast on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X