பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுவழியில் ரயிலை நிறுத்திவிட்டு ஓட்டுநர் செய்த காரியம்.. அப்படியே மிரண்டு பார்த்த மக்கள்! என்னாச்சு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில்வே கிராசிங் அருகே ரயில் ஓட்டுநர் செய்த செயலை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் சற்று மிரண்டு போய்விட்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் ரயில் நிலையத்தில் இருந்து பீகாரின் பராவ்னி வரை இயக்கப்படும் ரயில் குவாலியர்-பராவ்னி எக்ஸ்பிரஸ்.

இந்த ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் சில நாட்களுக்கு முன்பு செய்த செயல் தான் இப்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

அடபாவமே... காங்கிரஸ் வேட்பாளரை முந்திய நோட்டா.... பீகார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சம்பவம் அடபாவமே... காங்கிரஸ் வேட்பாளரை முந்திய நோட்டா.... பீகார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சம்பவம்

 எக்ஸ்பிரஸ் ரயில்

எக்ஸ்பிரஸ் ரயில்

குவாலியர்-பராவ்னி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் தேநீர் அருந்துவதற்காகப் பீகாரில் உள்ள சிவான் ஸ்டேஷன் அருகே உள்ள ரயில்வே கிராசிங் அருகே திடீரென ரயிலை நிறுத்திய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் ஓட்டுநர் டீ வாங்கவே இப்படி நடுவழியில் ரயிலை நிருத்தியாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்குதல் செய்ய ரயில்வே துறை உத்தரவிட்டது.

 விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், "இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவலர் மற்றும் லோகோ பைலட்டுகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் ரயில்வே ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ரயில் அதிகாலை 5.27 மணிக்கு சிவான் நிலையத்தை அடைந்தது.

 நடந்தது என்ன

நடந்தது என்ன

உதவி ஓட்டுநர் இன்ஜினில் இருந்து இறங்கி தேநீர் வாங்க அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். சிறிது நேரம் கழித்து ரயில் ஹாஜிபூர் நோக்கி மீண்டும் புறப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் இன்ஜின் கேபினுக்குள் தனது உதவியாளர் இல்லை என்பது லோகோ பைலட்டுக்கு நன்றாகவே தெரியும். கைகளில் டீ உடன் உதவி ஓட்டுநர் காத்திருந்த தேநீர்க் கடை அருகே ஓட்டுநர் வேண்டுமென்றே ரயிலை நிறுத்தினார். அதன் பின்னரே, உதவி ஓட்டுநர் அதில் ஏறினார்" என்று கூறுகின்றனர்,

 சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்

சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ்

இது தொடர்பாகச் சிவன் ஸ்டேஷன் மாஸ்டர் அனந்த் குமார் கூறுகையில், "இந்த ஸ்டேஷன் இயக்குநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது, அவர் வாரணாசியில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளரிடம் அதை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ரயில்வே கிராஸிங் அருகே ரயில் திடீரென நின்றதால், கிராஸிங்கின் இருபுறமும் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. குறிப்பாக நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸும் அங்கு நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

English summary
Gwalior-Barauni Express loco pilots stopped the train near a railway crossing close to have tea: (குவாலியர்-பராவ்னி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் தேநீர் அருந்த ரயிலை நடுவழியில் நிறுத்தினார்) Railways ordered as loco pilots stopped the train in bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X